மட்டக்களப்பில் ‘தராக்கி’ ஈழத் தமிழ் ஊடக முன்னோடி நூல் வெளியீடு
Share
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம்- இலங்கை, சிவராம் ஞாபகார்த்த மன்றம் – சுவிஸ் ஆகியன இணைந்து தொகுத்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராம் தொடர்பான கட்டுரைகள் அடங்கிய ‘தராக்கி’ ஈழத் தமிழ் ஊடக முன்னோடி நூலின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 15ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இத்தொகுப்பில் ஊடகத்துறை ஆளுமைகள், நண்பர்கள், உறவுகள் என 41பே எழுதிய கட்டுரைகள் இத்தொகுப்பில் உள்ளடஙகுகின்றன.
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எல். தேவஅதிரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், ஊடகவியலாளர் ஊடகவியலாளர் சபீனா சோமசுந்தரம் வரவேற்புரை நிகழ்த்துவார். நூல் அறிமுகத்தினை மகுடம் ஆசிரியர் மைக்கல் கொலின் நிகழ்த்துகிறார்.
நூல் வெளியீட்டைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், செல்வராசா கஜேந்திரன், இராசபுத்திரன் சாணக்கியன் ஆகியோரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி, பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
அத்துடன், காத்தான்குடி நகர சபை நூலகல் திருமதி க.ருத்ரகுமார், தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் ஆர்.பாரதி ‘ஆகவே’ ஜபார், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பெர்டி கமகே ஆகியோரும் உரையாற்றவுள்ளனர். நிகழ்வின் நிறைவாக கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் வ.சக்திவேல் நன்றியுரையைற்றுவார்.