LOADING

Type to search

இலங்கை அரசியல்

மண்டைதீவில் காணி சுவீகரிப்பு நடவடிக்கை மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

Share

யாழ்ப்பாணம் – மண்டைதீவில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை அப்பகுதி மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மண்டைதீவில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 29 பேருக்கு சொந்தமான 18 ஏக்கர் காணியினை, கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நோக்கில், இன்று அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினரால் அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த கடற்படை முகாமிற்கு முன்பாக இன்று ஒன்றுதிரண்ட மக்கள், காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களின் எதிர்ப்பால் காணி அளவிட எடுத்த முயற்சி, கைவிடப்பட்டது.
குறித்த எதிர்ப்புப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செல்வராசா கஜேந்திரன், வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

போராட்டத்தின் நிறைவில் போராட்டகாரர்களுக்கு பிஸ்கட் குளிர்பானம் வழங்க வந்த கடற்படையினருக்கு அதிருப்த்தியை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் கோஷம் எழுப்பி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது கோபமடைந்த காணி உரிமையாளரான பெண்மணி ஒருவர் ‘எங்கட காணியை விட்டு எழும்பி போங்கோ . அதற்கு பிறகு பிஸ்கட் சாப்பிடுவோம்’ என கடற்படை அதிகாரியை பார்த்து கடுமையாகப் பேசினார் எனவும் எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.