LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கைக்கு அதிக வருமானம் ஈட்டித்தரக்கூடிய சுற்றுலாத்துறை தொடர்பான 6 மாத பயிற்சியை நிறைவுசெய்தவர்களுக்கு சான்றிதழ்

Share

இலங்கைக்கு அதிக வருமானம் ஈட்டித்தரக்கூடிய துறையாக சுற்றுலாத்துறை அமைந்திருந்தும், வடக்கு மாகாணத்தில் இது போதியளவுக்கு வளர்த்தெடுக்கப்படவில்லை என்ற விடயத்தினை வலியுறுத்தி, வடக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயண வழிகாட்டிகளுக்கான 6 மாத பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு, யாழ். கோட்டை உட்பகுதியில் சான்றிதழ் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

நிகழ்வானது வடமாகாண சுற்றுலா குழுவின் முகாமைத்துவ தலைவர் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு. பத்திநாதன் தலைமையில் இடம்பெற்றது..

அவருக்கு உறுதுணையாக இருந்து வடக்கு மாகாண சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் வடக்கு மாகாண சுற்றுலா பயணத்துறை பணியகத்தின் முகாமைத்துவச் சபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனவிரத்ன, giz நிறுவன திட்ட முகாமையாளர் குமுதினி றோசா ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர்.

யாழ். பல்கலைக்கழக முகாதை்துவ பீடத்தில் சுற்றுலா முகாமைத்துவக் கற்கை முயற்சிகளை முன்னெடுத்துவரும் பேராசிரியர் சிவேசன், வடக்கு மாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தின் ஸ்தாபக தலைவரும் யாழ். பாடி விடுதியின் உரிமையாளருமான சுந்தரேசன், சுற்றுலாத்துறை ஒன்றியத்தின் செயலாளரும், My Pizza நிறுவன உரிமையாளருமான கார்த்திகன், யாழ். வணிகர் கழகத் தலைவர் ஜெயசேகம் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சான்றிதழ் பெற்ற இளைஞர்களை வாழ்த்தி ஊக்குவித்தனர்.