LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணம் – வல்வைப் படுகொலைகளின் 34ம் ஆண்டு நினைவேந்தல் புதன்கிழமையன்று அனுஸ்டிக்கப்பட்டது

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணம் – வல்வைப் படுகொலைகளின் 34ம் ஆண்டு நினைவேந்தல் புதன்கிழமை 2ம் திகதி அனுஸ்ட்டிக்கப்பட்டது

1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2ம் திகதி வல்வெட்டித்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இந்திய இராணுவத்தால் 63 தமிழ் பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டனர்.

அவர்களை நினைவுகூரும் நினைவேந்தல் அன்றையதினம் வல்வெட்டித்துறையில் நடைபெற்றது.

இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி, அக வணக்தத்துடன் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

இதில் படுகொலை செய்யப்பட்டவர்களது உறவுகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், த.தே.ம.மு பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் முக்கியஸ்தர் காண்டீபன், கட்சியின் உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.