இந்தியா தலைமன்னார் படகு சேவையை மூன்று மாதங்களில் ஆரம்பிக்க நடவடிக்கை
Share
பு.கஜிந்தன்
இந்தியா தலைமன்னார் படகு சேவையை மூன்று மாதங்களில் ஆரம்பிக்க நடவடிக்கை
37 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவின் இராமேஸ்வரத்திலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு பயணிகள் படகுப் சேவை மூன்று மாதங்களில் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
ஏற்கனவே யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையிலான கப்பல் சேவை இடம்பெற இருந்த நிலையில் தற்போது அது தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையிலான சேவையாக மாற்றப்பட்டுள்ளது.
ஏனெனில் தலைமன்னாரிலிருந்து இராமேஸ்வரம் சுமார் 18 கிலோமீட்டர் தூரமாகக் காணப்படும் நிலையில் விரைவான பயணத்தை மேற்கொள்வதற்காக திட்டம் மாற்றப்பட்டுள்ளது.
வடக்கில் இடம்பெற்ற மோதல்களின் போது தலைமன்னார் துறைமுகம் அழிக்கப்பட்டதுடன் சேவைகள் இடைநிறுத்தப்பட்டது.
இன் நிலையில் நேற்றையதினம் சனிக்கிழமை தலைமைன்னாருக்கு விஜயம் செய்த கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா துறைமுகப் பகுதியை நேரில் பார்வையிட்டார்.
துறைமுகத்தின் எல்லையில் உள்ள அரசுக்குச் சொந்தமான சுமார் 10 ஏக்கர் நிலம் துறைமுக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக கையகப்படுத்தப்படவுள்ளதுடன் முதற்கட்ட அபிவிருத்திக்காக சுமார் 1800 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.