புதிய உலக ஒழுங்கில் ஈழத்தமிழர்களின் அரசியல் அணுகுமுறை மருத்துவர். சி.யமுனானந்தா
Share
ஈரானின் வளர்ச்சியும் சீனாவின் வளர்ச்சியும் இலங்கையில் பாரிய செல்வாக்கினை எதிர்வரும் காலங்களில் செலுத்தும். இந் நிலையில் இலங்கையில் இனங்களிற்கிடையிலான முரண்பாடுகளும் மதங்களிற்கிடையிலான முரண்பாடுகளும் முன்னைய காலங்களை விட மிகவும் வேகமாக அதிகரிக்கும். இதனால் தமிழர்கள் அமைதியற்ற சூழலிலேயே வாழவேண்டிய நிர்ப்பந்தமும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய சூழலும் அதிகரிக்கும்.
கொரோணாப் பெருந்தொற்றும் உக்கிரெயின் ரஸ்சியா மோதலும் உலகில் பாரிய பொருளாதார நெருக்கடியினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலகின் பல நாடுகளில் அரசியல் ஸ்திரத் தன்மை குலைந்துள்ளது. இதற்கு இலங்கையும் விதி விலக்கல்ல.
தற்போதைய பொருளாதார நெருக்கடி சமூகத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தமது அன்றாட உணவுக்கு உழைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். சமூகத்தில் செல்வந்தர்களைத் தவிர ஏனையவர்களுக்கு தமது வருமானம்> தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய பூரணமாக அமையாதுள்ளது. இதனால் உணவைத் தவிர ஏனைய தேவைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை பலருக்கு ஏற்பட்டுள்ளது. வறுமைக்கு மணம் உண்டுÉ குணம் உண்டு நிறம் உண்டு.
குறிப்பாக ஆடைகள் சவர்க்காரம் போன்ற செலவுகள் மட்டுப்பட்ட நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அழுக்கடைந்த ஆடைகள் பாவித்தல்> துர்நாற்றம் வீசும் நிலையில் பொது இடங்களிற்கு வருதல் சமூக நிலையில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இது இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன் இங்கு இருந்த நிலைக்கோ அல்லது இற்றைக்கு 20 வருடங்களுக்கு முன் பங்களாதேசத்தில் இருந்த நிலைக்கோ இட்டுச் சென்றுள்ளது. இதனையே வறுமைக்கு மணம் உண்டு> நிறம் உண்டு என்பது. அடுத்ததாக வறுமையின் குணம்> அடிமைத்தனமானதாக அமையும். யாரிடமும் கையேந்தும் நிலை> அகதியாக வேற்று நாடுகளிற்கு செல்லும் மனநிலை என்பன வறுமையின் குணங்களாகும்.
நாம் எமது சமூகத்தின் வறுமையினைப் போக்க பல்வேறு நுண்ணிய அபிவிருத்தியினை மேற்கொள்ள வேண்டும். பல்வேறு தொழில் முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும்.
அதே வேளையில் உக்கிரெயின் ரஸ்சியா போரில் மனித குலத்திற்கு எதிராக ஆயுதங்களின் பிரயோகம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளால் உக்கிரெயினுக்கு வழங்கப்பட்ட அதி நவீன தொழில்நுட்ப ஆயுதங்களில் ரஸ்சியாவால் கைப்பற்றப்பட்டு மீள்தொழில்நுட்ப பொறியியல் மூலம் உருவாக்குவதற்காக ரஸ்சியாவின் நட்பு நாடான ஈரானுக்கு அனுப்பப்பட்டுவிட்டன. இதனை ஈரானிய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இதனால் மத்திய கிழக்கில் ஈரான் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இராணுவ பலத்துடன் பெற்றோலிய வளத்துடனும் வல்லரசாக ஊருவாகும் நிலை ஏற்பட்டுவிட்டது.
ஈரானின் வளர்ச்சியும் சீனாவின் வளர்ச்சியும் இலங்கையில் பாரிய செல்வாக்கினை எதிர்வரும் காலங்களில் செலுத்தும். இந் நிலையில் இலங்கையில் இனங்களிற்கிடையிலான முரண்பாடுகளும் மதங்களிற்கிடையிலான முரண்பாடுகளும் முன்னைய காலங்களை விட மிகவும் வேகமாக அதிகரிக்கும். இதனால் தமிழர்கள் அமைதியற்ற சூழலிலேயே வாழவேண்டிய நிர்ப்பந்தமும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய சூழலும் அதிகரிக்கும்.
எனவே தமிழ் அரசியல்வாதிகளும் புத்தி ஜீவிகளும் இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக வாழுவதற்கு மிகவும் பொருத்தமான இந்திய சார்பு அரசியல் நிலைப்பாட்டினை எடுத்தல் காலத்தின் தேவையாகும். புதிய உலக ஒழுங்கில் தமிழர்களின் இருப்பிற்கான போராட்டம் பாரிய விட்டுக்கொடுப்புடனேயே நிகழ வேண்டும். இன்று உக்கிரெயின் அழியும் நிலையில் நாம் மனித நேயத்தைப் பற்றியோ சமஸ்டி பற்றியோ பேசினால்; அதனை கேட்பதற்கு உலகில் யாரும் இல்லை என்பதனையும் புரிந்து கொள்ளல் அவசியமாகும். தற்போது ஈழத் தமிழர்களை பாதுகாக்கும் அஸ்திரம் 1987 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம் மட்டுமே ஆகும். அதன் மூலம் நாம் தற்போதைய பொருளாதார அரசியல் இராணுவ இடர்களை எதிர்கொள்ளல் அவசியம். அன்றேல் பாரிய சமூக கால இடைவெளி எமது சமூகத்திற்கு தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர் தேசங்களிலும் ஏற்படும்.