LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கையில் ‘உண்மைகளைச் சாகடிக்கும்’ வரலாறு எதுவரை தொடரும்?

Share

வி.தேவராஜ்

மூத்த ஊடகவியலாளர்

 

  • ‘இராணுவத்திடம் ஒப்படைத்த எம் பிள்ளைகளுக்கு மரணச் சான்றிதழ்தான் பதில் என்றால் கொலை செய்தவன் யார்?’
  • சர்வதேச நீதிப் பொறிமுறையே வேண்டும்’.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான புதன் கிழமை (30 ஒகஸ்ட் 2023) வடக்குக் கிழக்கில் பேரெழுச்சியுடன் திரண்ட மக்கள் சர்வதேசத்திற்கு உறுதியான செய்தியை மீண்டும் ஒரு முறை தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர்  தினத்தை 2011 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 30 ஆம் திகதி பிரகடனப்படுத்தியது.என்பது குறிப்பிடத்தக்கது.

  • “எமது பிள்ளைகள் எங்கே? “
  • “எமது உறவுகள் எங்கே?”
  • “வட்டுவாகலில் கையளிக்கப்பட்டவர்கள் எங்கே?”
  • “கொலையாளி ஜனாதிபதியாய் உள்ள நாட்டில் எமக்கு எப்படி நீதி கிடைக்கும்”.
  • “ஐ.நா.வே! கைகளில் ஒப்படைத்தவர்களை தேட ழுஆP அலுவலகம் தேவையா”
  • “இராணுவத்திடம் ஒப்படைத்த எம் பிள்ளைகளுக்கு மரணச் சான்றிதழ்தான் பதில் என்றால் கொலை செய்தவன் யார்”?
  • “சர்வதேச நீதி கோரியே போராட்டம் .”
  • “சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட நீதிப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்”

இவ்வாறான குரல்களினால் வடக்குக் கிழக்கு அதிர்ந்தது.

.நா பிரகடனப்படுத்தியுள்ள தினங்களில் மாத்திரமே அந்தந்தத் தினங்களுக்குரிய கோரிக்கைகள் ஒலிப்பது வழமையாக இருந்தபோதும் இலங்கையைப் பொருத்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் .நா பிரகடனப்படுத்தியுள்ள தினத்துக்கும் அப்பால் நாளாந்தம் வடக்குக் கிழக்கில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது

2009 யுத்தத்தின் போது சர்வதேசத்தையும் அதன் சட்டவிதிகளையும் நம்பி கையளித்த உறவுகள்தம்மால் கையளித்த உறவுகள் எங்கே? அவர்களுக்கு என்ன ஆனது?’ என்ற பொறுப்புக்கூறலினை சர்வதேசத்திடம் கோரி இரவு, பகலாக வீதியோரத்தில் முன்னெடுத்து வரும் அறவழி சாத்வீகப் போராட்டமானது 12.08.2022ஆம் நாள் 2018 நாட்களைத் தொட்டுள்ள நிலையில் நீதிகோரி தொடர்ச்சியாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட  உறவுகள் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்குமுகமாக நீதிக்கான கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் பேரணிகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது .

மொத்தத்தில் 2378 நாட்களுக்கு மேல் உறவுகளைத் தேடும் உறவினர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் இந்தப் போராட்டத்தில் இதுவரை 140 உறவுகள் தமது உறவுகளைக் காணாமலே உயிரிழந்துள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது

1996 ஐநா அறிக்கை ஒன்றின் படி 1980-96 காலப்பகுதியில் இலங்கையில் 11,513 பேர் காணமல் போய் உள்ளனர். இது உலகில் ஈராக்குக்கு அடுத்தபடியான இரண்டாம் நிலை ஆகும்.

. 1999 ஆசிய மனிதவுரிமை ஆணையத்தின் அறிக்கை ஒன்றின் படிஇ அப்போது 16,742 எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத வழக்குகள் இருந்தன.அதன் பிறகு நடத்தப்பட்ட ஆள்கடத்தல்களும் காணாமல் போதல்களும் இந்த எண்ணிக்கையை ஆயிரக்கணக்கில் அதிகரித்திருக்கும் இவ்வாறு கடத்தப்படுவர்களின் பெரும்பான்மையானோர் இலங்கைத் தமிழர்கள் ஆவர்.

போர்க் காலத்தில் மாத்திரமல்ல இதற்கும் அப்பால் போர் மௌனமாக்கப்பட்ட வேளை தமது உறவுகளை படையினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கும் இதுவரை என்ன நடந்தது என்பதுகுறித்து உறவுகளினால் தகவல்களைப் பெற முடியாதிருக்கின்றது

இலங்கை வடக்கு கிழக்கு தமிழர் வாழ் பகுதிகளில் யுத்த அனர்த்தங்களால் பொது மக்களிற்கான மனிதாபிமானப் பணிகளில் ஈடுப்பட்டு வரும் தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களும் அடிக்கடி கடத்தப்பட்டு காணாமல் போவதும் கொலைச்செய்யப்படுவதும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. தமிழர் புனர்வாழ்வுக் கழக பணியாளர்கள் மற்றும் மனிதவுரிமை பணியாளர்கள் 57 பேர் கடத்தப் பட்டு கொலைச்செய்யப்பட்டுள்ளோர் விபரத்தையும் ஆசிய மனிதவுரிமை ஆணையம் வெளியிட்டுள்ளது. 16 இவர்கள் அணைவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

  • ஆணைக் குழுக்கள்

 

முதலாவது ஆணைக்குழு 1992 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஆர். பிரேமதாசவினால் நியமிக்கப்பட்டதுஇ அவரின் ஆட்சியில் ஆயிரக்கணக்கான காணாமல் போனவர்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டது

பின்னர் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தேசிய அளவிலான ஆணைக்குழுவையும் அதே நோக்கத்திற்காக மூன்று வலய ஆணைக்குழுக்களையும் நியமித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  2010 இல் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (LLRC) மற்றும் 2013 இல் காணாமல் போனோர் ஆணைக்குழு என அழைக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவை நியமித்தார். பரணகம ஆணைக்குழுவிற்கு 19,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

தற்போது இயங்குகின்ற ழுஆP வரை எந்த ஒரு ஆணைக்குழுவும் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடி அலையும் உறவுகளுக்கு பதில் கூறியதாக இல்லை. உண்மையில் இந்த ஆணைக்குழுக்கள் அனைத்துமே சர்வதேசத்தையும் .நாவையும் சாளிப்பதற்கான நகர்வுகளாகவே அமைந்துள்ளன.எனவேதான் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேச நீதிப் பொறிமுறையைக் கோரி நிற்கின்றனர்.

இலங்கையில் எந்த அரசாங்கமும் அல்லது எந்தவொரு சிங்கள அரசியல் தலைவரும் காணாமல்போனோர் விவகாரத்துக்குப் பதில் கூற முன் வரும் நிலையில் இல்லை

1980 களில் இருந்து நாட்டின் அனைத்து தலைவர்களிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மட்டுமே 2020 ஜனவரி 17 அன்று ஐநா வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹன்னா சிங்கருட னான ஒரு சந்திப்பின் போது காணாமல் போன அனைவரும்உண்மையில் இறந்துவிட்டார்கள்என்று கூறினார் என்பதை டெய்லிமிரர் பத்தி எழத்தாளரான  M.S.M.Ayub குறிப்பிட்டுள்ளார்.  

.நா.வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹன்னா சிங் 2020 ஆண்டு இலங்கை வந்தபோது அப்போதைய ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவால் தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் அவ்வேளையில் இந்த விடயம் வெளிப்படுத்தப்படவில்லை. காலம் பிந்தியே தெரிவித்தார் என்பதே உண்மையாகும்.

காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிய எந்த ஒரு தலைவரோ அல்லது அரசாங்கமோ உண்மையான முயற்சியை மேற்கொள்வது அரசியல் ரீதியாக தற்கொலை செய்து கொள்ளும் செயலாகும். மறுபுறம் தமிழ்த் தலைவர்கள் இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப தமது கோரிக்கைகளை மாற்றிக் கொள்வதும் தற்கொலைச் செயலாகும். எனவேதான் இந்த விடயம் முடிவின்றி தொடர்கிறது என்றும்  M.S.M.Ayub குறிப்பிட்டுள்ளார்

மொத்தத்தில் சிங்கள ஆளும் வர்க்கம் தத்தமது அரசியல் இருப்புக்காக எவ்வளவு காலத்திற்கு உண்மைகளை சாகடிக்க முடியும் என்பதே கேள்வியாகும்.