LOADING

Type to search

இலங்கை அரசியல்

பாரதத்தின் சாகர ஆய்வுகளின் அவசியம்

Share

மருத்துவர்.சி.யமுனாநந்தா

இலங்கையைச் சூழ உள்ள சாகரப் படுக்கைகளில் விஞ்ஞான ஆய்வுகள் துரிதப்படுத்த வேண்டிய தேவை பாரத தேசத்திற்கு உள்ளது. இலங்கையைச் சூழ உள்ள குமரிக் கண்டம் பரந்த நிலப்பரப்பு இருந்த வரலாற்றினையும் அதற்கு அப்பால் கந்த புராணத்தில் வீரமகேந்திரபுரம் இருந்த வரலாற்றையும் இராமாயணத்தில் இராமர் அணை இருந்த வரலாற்றையும் காலத்துடன் கருதுவது அவசியம். கந்தபுராணத்தில் வீரமகேந்திரபுரம் வீரவாகுதேவரால் கடலினுள் அமிழ்த்தப்பட்ட தன்மையையும் இலங்கை கடலில் அமிழ்த்தி மீள எழுப்பப்பட்ட தன்மையையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று விண்வெளியில் வெற்றி கொண்ட பாரத தேசம் ஆழ்கடல் ஆய்வுகளுக்கு மிகவும் முன்னுரிமை அளித்தல் மிகவும் இன்றியமையாததாக அமைகின்றது. இதனை வலியுறுத்துவதாகவே இலங்கையைச் சூழ சீன ஆய்வுக் கப்பல்களின் பணி அமைகின்றது. ஆழ்கடல் ஆய்வுகள் பூகோள வெப்பமடைதலால் ஏற்படும் சமுத்திர நீரோட்ட மாற்றங்கள், காலநிலை மாற்றங்கள் , சூரிய வெப்பக் காழுகை சார்பான செய்மதித் தொடர்புகளின் எதிர்வு கூறல்களுக்கு ஏற்ப பூகோளத்தில் ஏற்படும் நிலநடுக்கம், எரிமலை, கடல்கோள் என்பவற்றை எதிர்வுகூறல் , இயற்பியல் ஆய்வுகள் , தொல்லியல் ஆய்வுகள் என்பவற்றை சாகரத்தில் மேற்கொள்ளல் அவசியம்.. ஆழ்கடல் உயிரிகள் , வேற்றுக்கிரக பொருட்களின் தடயங்கள் என்பவற்றை ஆழ் சாகர ஆய்வில் முதன்மைப்படுத்தல்; வேண்டும்.

சமுத்திரங்களின் ஆழிகளிடையே புவியீர்ப்பு விசை குறைவடைந்து செல்கின்றது. இலங்கைக்குத் தென் கிழக்குத் திசையில் இந்து மா சமுத்திரத்தில் உலகிலேயே புவியீர்ப்பு விசை குறைந்த சமுத்திர ஆழி பாதாள உலகாக அமைந்துள்ளது.

ஆய்வுகூடங்களிலும் செயற்கையான ஆழ்துளைகளிலும் செய்யப்பட்ட ஆய்வுகளில் பிரபஞ்சத்தின் கருஞ் சக்தியினை (Dark Energy) சேர்க்கோணியம்(Zr) மூலகம் தன்னகப்படுத்தும் தன்மை ஆரம்ப நிலைகளில் ஐயுற அறியப்பட்டுள்ளது.
பார உலோகங்களின் திணிவு மாற்றத்தில் கருஞ் சக்தியின் பங்கு பற்றிய ஆய்வுகள் எமது பிரபஞ்சத்தில் கரும் பொருட்கள், (Black Matter) கருஞ் சக்தி (Black Energy) என்பவற்றை பரிசோதனை ரீதியில் நீரூபிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தும் இதற்கு புவிமேற்பரப்பினுள் புவியில் சமுத்திரத்தின் அடியிலுமுள்ள பார உலோகங்களின் பண்பு மாற்றங்கள் பற்றிய சுட்டிகள் உதவும்.

எனவே நவீன இயற்பியல் கருதுகோள்களுக்கு சாகர ஆய்வுகள் விண்வெளி ஆய்வுகள் போல் உறுதுணையாக அமையும்.

எமது நாகரிகத்தில் வைர நகைகளை அரசர்கள் அணிவதும் வைரக் கிரீடம் அணிவதும் வழமை. வைர நகைகள் சேர்க்கோணியம் மூலகத்தினைக் கொண்டிருப்பதும் அது குண்டலினி சக்தியை பிரபஞ்ச சக்தியுடன் இணைக்கும். ஆலயங்களில் இறைவனின் அணிகலன்களும் வைரத்தினால் அமைவது குண்டலினி சக்தியினதும் பிரபஞ்சத்தின் தொடர்பாகவே அமையும். அவ்வாறே பூமியின் மையத்திலுள்ள பார உலோகங்கள் பிரபஞ்ச கருஞ் சக்தியினை பயன்படுத்தும் ஆற்றலை உடையதாக அமையும். எனவே எதிர்கால ஆழ்கடல் ஆய்வுகளில் பார உலோகங்களின் திணிவு மாற்றங்கள் கருஞ் சக்தி காழலை கண்டறிய உதவும். புவியீர்ப்பு அலைகளின் கண்டறிவு எவ்வாறு பிரபஞ்ச இயற்பியலை கடந்த தசாப்தத்தில் மாற்றி அமைத்ததுவோ அவ்வாறே கருஞ் சக்திக் காழலை ஆய்வு ரீதியாக உறுதிப்படுத்தின் பிரபஞ்ச இயற்பியல் புதிய பரிமாணத்தை அடையும்.

பார் ரதம் அதுவே பாரதமாக அமையும் விண்ணில் மட்டுமல்ல சாகர அடியிலும்.