LOADING

Type to search

இலங்கை அரசியல்

சேனையூர் அனாமிக்கா பண்பாட்டு மையத்தில் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

Share

இரட்ணம் பவுன்டேசன் UK மற்றும் வன்னி ஹோப் AUSTRALIA ஆகிய நிறுவனங்கள் இணைந்து கணினி பயிற்சி நடாத்தி பயிற்சி நெறியினை நிறைவு செய்த முதலாம் வருட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் சேனையூர் அனாமிக்கா பண்பாட்டு மையத்தில் அதன் ஸ்தாபகர் பேராசிரியர் பாலசுகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

கிராமப்புரங்களில் டிஜிட்டல் கல்வியை மேம்படுத்துவதில் இரட்ணம் பவுன்டேஷன் மற்றும் வன்னி ஹோப் நிறுவனங்களின் சேவைகள் மகத்தானதாகும் என வன்னி ஹோப் நிவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் எம். ரீ. எம். பாரிஸ் தெரிவித்தாா்.

அவர் மேலும் தெரிவிக்கையில கணனி அறிவினை விருத்தி செய்யும் பணிகளில் இரட்ணம் பவுன்டேஷன் மற்றும் வன்னி ஹோப் நிறுவனங்கள் செயற்பட்டுவருவதில் நாம் பெருமை கொள்கின்றோம். நம் இளைஞர் சமூகத்தினுடைய எதிர்காலம், தொழில் வாய்ப்புகள், தொழில் சாா் தகைமைகள் என்பவற்றினைக் கருத்திற் கொண்டு கணனி வளநிலையம் ஒன்றை மூதுாா் பிரதேசத்தில் ஸ்தாபித்து இப்பிரதேச இளைஞர்கள், பாடசாலையை விட்டு விலகிய மாணவர்கள், தொழில் தேடிக் கொண்டிருப்போா், மாணவர்கள் போன்ற பல்வேறுமட்ட தரப்பினருக்கு கணனி கற்கையை வழங்கிவருகின்றோம். இந்த கற்கை நெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருப்பதானது எமது செயற்றிட்டத்தின் ஒரு மைல்கல் எனலாம்.

பயிற்சி நெறியினை நிறைவுசெய்த மாணவர்கள் அடுத்த கட்ட தொழில் சாா் தகமையை தொடருவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்த மகத்தான சேவையில் சேனையுர் அனாமிக்கா பண்பாட்டு மையம் எங்களுடன் கைகோர்த்திருப்பதை நாங்கள் ஒரு பலமாகவே பாார்கின்றோம். இந்த பணிக்காக உதவி வரும் இரட்ணம் பவுண்டேஷன் நிறுவனத்தின் ஸ்தாபகர் கலாநிதி நித்தியானந்தன், வன்னி ஹோப் நிறுவனத்தின் ஸ்தாபர் திரு. ரஞ்சன் சிவஞாணசுந்தரம் மற்றும் அனாமிக்கா பண்பாட்டு மையத்தின் ஸ்தாபகர் பேராசிரியர் பாலசுகுமாா் ஆகியோருக்கு நன்றியை இவ்விடத்தில் கூறிக்கொள்வதில் பெருமை கொள்கின்றேன்.

இந்த நிகழ்வுக்கு அதிதியாக வன்னி ஹோப் அவுஸ்திரேலியா நிறுவனத்தின் செயலாளரும் பணிப்பாளருமான வைத்தியர் மாலதி வரன் அவர்களும் அனாமிகா பண்பாட்டு நிலையத்தின் உத்தியோகத்தர்கள் வன்னி ஹோப் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் சான்றிதழ் பெறுகின்ற மாணவர்கள் கல்வி பயில்கின்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.