பளு தூக்குதல் போட்டியில் பதக்கங்களை குவித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக அணி!
Share
பு.கஜிந்தன்
இலங்கையில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான 14 ஆவது மினி ஒலிம்பிக் போட்டியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பெண்கள் பளுதூக்கு அணி 5 தங்கம் ,2 வெள்ளி, 1வெண்கல பதக்கங்களை பெற்று இவ்வருட சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டது. இவ்வருடமே முதன் முதலாக பெண்கள் பளுதுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
1. N.மிதுசா 49 kg எடை பிரிவில் 90 kg எடையினை தூக்கி தங்க பதக்கதினை பெற்றார்
2. K. சனுஜா 49 kg எடை பிரிவில் 71 kg எடையினை தூக்கி வெள்ளி பதக்கதினை பெற்றார்
3. H. A. I. N.ரத்ன நாயக்க 55kg எடை பிரிவில் 100kg எடையினை தூக்கி தங்க பதக்கதினை பெற்றார்
4. J. பஜினா 64kg எடை பிரிவில் 120 kg எடையினை தூக்கி வெள்ளி பதக்கதினை பெற்றார்
5. R.தசாந்தினி 76kg எடை பிரிவில் 110 kg எடையினை தூக்கி தங்க பதக்கதினை பெற்றார்
6. R.தக்சாயினி 81kg எடை பிரிவில் 100 kg எடையினை தூக்கி தங்க பதக்கதினை பெற்றார்
7.D. M. D. M.தனபால 87kg எடை பிரிவில் 79kg எடையினை தூக்கி வெண்கல பதக்கதினை பெற்றார்
8.S.ஜீவமலர் +87kg எடை பிரிவில் 80kg எடையினை தூக்கி தங்க பதக்கதினை பெற்றார்.
ஆண்கள் பளுதுக்கள் பிரிவில் T. நர்மதன் 89 kg எடை பிரிவில் 195kg எடையினை தூக்கி தங்க பதக்கத்தினை பெற்று கொண்டார்.