’தியாய தீபம்’ திலீபனின் நினைவுநாள் ஊர்தி பவனி மீது சிங்கள மக்களால் திருகோணமலையில் தாக்குதல்
Share
இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படைகள் நிலைகொண்டிருந்த காலத்தில், அந்த படைகளுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும் இடையே தொடர்ச்சியாக மோதல்கள் இருந்து வந்ததும், இந்தியப் படைகள் அத்துமீற்ல்களில் ஈடுபட்டன என்ற குற்றச்சாட்டு இன்றளவு உள்ளது. அதன் காரணமாகவே அவர்களுக்கும் புலிகளுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டு கடும் மோதல்களுக்கு வழிவகுத்தன என்பது வரலாறு.
தனது ஐந்து அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றபடாததால், அறவழியில் உண்ணாவிரதம் தொடங்கி, 12 நாட்களுக்கு பிறகு அவர் தாய்மண்ணிற்க்காக தனது உயிரை தியாகம் செய்தார். இதையடுத்து அவர் தமிழ் மக்களால் மிகுந்த அன்பு மற்றும் மரியாதையுடன் “தியாக தீபம்” என்று அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு ஆண்டும் அவரை நினைவுகூர்ந்து உளப்பூர்வமாக அஞ்சலி செலுத்துகின்றனர்.
அவ்வகையில் இந்த ஆண்டும், அவர்கள் அஞ்சலி செலுத்த தொடங்கினர். அவரது நினைவி போற்றும் வகையில் கிழக்கே பொத்துவில்லில் தொடங்கி யாழ்ப்பாணம் நல்லூர் வரை வாகன் பவனி ஒன்றை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்தது. அந்த வாகனம் திருகோணமலை மாவட்டம் கப்பற்துறையருகே சென்றுகொண்டிருந்த போது சிங்கள கும்பல் ஒன்று அந்த வாகனம் மற்றும் அதனுடன் பயணித்துக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது மோசமான தாக்குதலை நடத்தியது. இந்த சம்பவம் தொடர்பான கானொளி சமூக ஊடகங்களில் தீயாகப்பரவியுள்ளன.
அங்கு பொலிசார் பாதுகாப்பு கடமையில் இருந்த போதும், அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினரையும், அந்த வாகனப் பவனி மீதான தாக்குதலையும் தடுக்கவோ அல்லது காப்பாற்றவோ செய்யவில்லை. அவர்கள் மௌனமாக நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருந்ததும் கானொளியில் காணப்படுகிறது.
இந்தச் சம்பவத்தை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் என பல்துறையினர் கண்டித்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளது: