LOADING

Type to search

பொது

“செயலி சூழ் உலகு”

Share

தற்போதுள்ள யுகம் தொழில்நுட்ப யுகம். மனிதனின் 6-வது விரலாகவே ஸ்மார்ட்போன் மாறிப் போய் உள்ளது. நடுத்தரவர்க்கத்தினர் முதல் மிகப்பெரிய செல்வந்தர் வரை அவரவர் வசதிக்கேற்ப ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். ஒட்டுமொத்த உலகத்தின் வளர்ச்சியால் நமக்குத் தேவையான தகவல்கள் மற்றும் பல விவரங்களை உடனடியாக வழங்குவது தான் இணையம் இதன் பரிமாண வளர்ச்சி தான் ஸ்மார்ட்போன் செயலிகள்.நமது அன்றாட வாழ்வில் தேவையான பலவகைத் தகவல்களை நமக்கு அளிக்கின்றன. 2019 ஆம் ஆண்டின் கணக்கின்படி சுமார் 19 பில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட் போன் செயலிகள் பதிவிறக்க பட்டுள்ளன. இந்தியாவில் கிட்டத்தட்ட 46% சில்லறை பரிவர்த்தனைகள் ஸ்மார்ட் போன் செயலிகள் மூலம் செய்யப்படுவதாக ஆய்வுகள் தெரிகின்றன. நாம் எந்த நேரத்தில் என்னென்ன செய்வோம் எங்கெங்கு சென்றோம் எவ்வளவு நேரம் யாரிடம் பேசினோம் நமது வங்கிக் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது நாம் எங்கு பயணம் செய்கின்றோம் அங்கு போக்குவரத்து நெரிசல் உள்ளதா அருகில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் எரிபொருள் நிரப்பும் இடங்கள் உணவகங்கள் போன்ற தகவல்களை நமக்கு அளிக்கின்றது.நாம் ஆரோக்கியமாக இருக்கின்றோமா அவ்வாறு இல்லை என்றால் என்ன செய்வது, சரியான விகிதத்தில் தண்ணீர் அருந்துகின்றோமா,நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த என்னவெல்லாம் செய்யலாம். என்பது போன்ற தகவல்களை நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் செயலிகள் மூலம் நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

செயலிகளின் வளர்ச்சி:

முன்பொரு காலங்களில் பணம் வேண்டும் என்றால் வங்கிக்கு சென்று கால்கடுக்க பல மணி நேரங்கள் காத்திருந்து பணம் எடுக்கவும், டெபாசிட் செய்யவும் இருந்த காலம் போய், இன்று இருந்த இடத்தில் இருந்து நிமிடங்களில் நமது ஸ்மார்ட் போன்கள் மூலமாக மூலம் பணம் அனுப்பும் பரிமாற்ற முறையானது பெரும் பிரபலமாகி வருகின்றது. இதனை வங்கிகளே இவ்வகை பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கின்றன இதனால் பொதுமக்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பயன்பாட்டின் எளிதே இதன் வெற்றிக்கு முதல் காரணம். படித்தவர் முதல் பாமரர் வரை அனைத்து மக்களும் மிக எளிதாய் பயன்படுத்துவது தான் இதன் சிறப்பு. அதனால் ஆன்லைன் பேமெண்ட் செயலிகள் அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன. பெட்டிக்கடை முதல் அதிநவீன மால்கள் வரை நமது ஸ்மார்ட் போனில் உள்ள பேமெண்ட் ஆப் ஸ்கேனரை ஸ்கேன் செய்து சில நிமிடங்களிலேயே பணம் செலுத்திவிடலாம். இதனால் சில்லறை  தட்டுப்பாடு என்பது ஏற்படுவதில்லை. முன்பொரு காலத்தில் நமக்கு பிடித்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்றால் அந்த திரையரங்கில் சென்று கால் கடுக்க நின்று டிக்கெட் எடுத்து நாம் விரும்பிய திரைப்படத்தை பார்க்கும் சூழல் இருந்தது ஆனால் இப்போது வீட்டில் இருந்தபடியே நமது ஸ்மார்ட் போன் மூலமாகவே இணையத்தில் டிக்கெட் பெறும் முறை மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. நகரப்பகுதிகள் காலையில் பால் வாங்குவது தொடங்கி, உணவருந்தும் ஹோட்டல்களில் பில்கள், மளிகை பொருட்கள், மொபைல் ரீசார்ஜ்,மின் கட்டணம் எனப் பற்பல சேவைகளையும் நான் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன் செயலி மூலமாக செய்து கொள்ளலாம்.

அன்றாட வாழ்வில் செயலிகள்:

பரபரப்பான இன்றைய வாழ்வியல் சூழ்நிலையில் ஸ்மார்ட்போன் என்பது மிக முக்கியமாக ஒன்றாக பார்க்கப்படுகின்றது பல வேலைகளை நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் செயலிகள் நமது வேலையை எளிதாக்குகின்றன. மேலும் இன்று

ஸ்மார்ட் போன் செயலிகள் மூலம் உணவு விநியோக பயன்பாடுகள் என்பது அதிகரித்துள்ளது இது இல்லாத வாழ்க்கையை இன்று நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. ஆன்லைன் உணவு விநியோக சேவைகள் தொழில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்களில் ஒன்றாகும்.2022 ஆம் ஆண்டளவில் ஆன்லைன் உணவு விநியோகத் துறை 8.4% வளர்ச்சியடையும் என்று ஆய்வு கூறுகிறது. உணவு டெலிவரி நிறுவனங்களின் விற்பனை படுஜோராகவே இருக்கிறது. இந்தியாவில் மட்டும் நாள்தோறும் 10 லட்சத்துக்கும் அதிகமான ஆர்டர்கள் வருவதாக கூறப்படுகிறது. மேலும் செயலிகள் மூலம் புக் செய்யப்படும் வாடகை கார்கள் கூகுள் மேப் உதவியுடன் நாம் இருக்கும் இடத்திற்கே வந்து நம்மை நாம் விரும்பிய இடத்திற்கு கூட்டி செல்வது போன்ற காரணங்களாலும் பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த வகை செயலிகள் வடிவமைத்திருப்பது போன்ற காரணங்களால் இவ்வகையான செயலி மூலம் இயங்கும் டாக்ஸிகளுக்கு இந்தியா போன்ற பல்வேறு நாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் அவற்றின் வருவாயும் சென்ற ஆண்டை காட்டிலும் 13. 7 சதவீதம் அதிகரித்துள்ளதாக வளர் தொழில் முன்னேற்ற அமைப்பு என்ற ஒரு தனியார் நிறுவனம் இந்தியாவில் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

விழிப்புணர்வு அவசியம்:

நான் பயன்படுத்தும் செயலிகளில் குறை நிறைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆம் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களால் ஆபத்துகளும் பிரச்சனைகளும் அதிகமாகவே உள்ளன. எனவே எந்த வகையான செயலிகளை பயன்படுத்துகின்றோம், எதற்காக பயன்படுத்துகிறோம், அது நமக்கு எவ்வாறு உதவுகின்றது இதனால் ஏற்படும் நன்மை தீமைகள் என்ன என்பது பற்றிய புரிதல் என்பது நமக்கு அவசியம். நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஒவ்வொரு செயலிகள் மற்றும் ஸ்மார்ட் சாதனங்களால் நமது தனிப்பட்ட விவரங்கள் வெளியாவது அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஸ்மார்ட் ஃபோன்களின் வளர்ச்சியினால் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. நமது வங்கிக் கணக்கில் உள்ள பணம் திருடு போவதற்கு இந்த மொபைல் செயலிகள் ஒரு காரணமாக அமைகின்றன. தினந்தோறும் செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளே இதற்கு சாட்சி ஆன்லைன் மூலம் பண மோசடி என்ற செய்திகள் சமீப காலமாக அதிகமாக வருகின்றன. என்னதான் நாம் விழிப்புணர்வுடன் இருந்தாலும் ஒரு சில நேரங்களில் நமக்கே இது பயத்தினை தருகின்றது. செயலிகள் மூலம் பணம் செலுத்தும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால்  என்ன செய்வது?. பணம் எவ்வாறு செலுத்துவது என்பது கேள்விக்குறி தான். மேலும் டிஜிட்டல் நிதி பரிவர்த்தனைகள் தோல்வியடையும் போது நமது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு பரிவர்த்தனைகள் தோல்வி  என்ற செய்தி வரும் போது அந்த பணத்தை எவ்வாறு மீட்பது யாரிடம் கேட்பது என்பதில் பலருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. எது எப்படியோ இதில் நன்மை தீமைகள் கலந்து தான் உள்ளன. இதில் உள்ள நன்மைகளை மட்டும் எடுத்துக் கொண்டு நமக்கு தேவையில்லாதவற்றை விட்டு விடுவோம் அவ்வாறு செய்தால் மட்டுமே நம்மால் இந்த டிஜிட்டல் யுகத்தில் சரியாக இருக்க முடியும். விழிப்புணர்வு என்பது மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகின்றது. போலியான செயலிகள் மற்றும் தகவல்களில் இருந்து நம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டும். சரியான முறையில் ஸ்மார்ட் போன்கள் அதன் செயலிகளை பயன்படுத்துவோம் பாதுகாப்பாய் இருப்போம் முன்னேறுவோம்..