மட்டக்களப்பில் பயங்கரவாத மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
Share
(09-10-2023)
மட்டக்களப்பில் இலங்கை அரசு உடனடியாக அடக்குமுறை சட்டவரைகளான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், நிகழ்நிலை காப்புச் சட்டம் மீளப் பெற வேண்டும் என கோரி எதிர்ப்பு தெரிவித்து கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்கா வரையில் கண்டன ஆர்ப்பாட்ட ஊர்வலம் இன்று திங்கட்கிழமை (9) இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் காலை 10 மணியளவில் மட்டு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் ஒன்றிணைந்தனர்.
இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நிதி வேண்டும், அனைத்து மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறலை உறுதி படுத்து, நிகழ்நிலை காப்பு சட்டத்தை முன்மொழிவதை மீளப்பெறல், ஊடகத்திற்கு சுதந்திரம் மற்றும் சுயாதீனம் வேண்டும், தகவல்களை அறிவதற்கும் கருத்து சுதந்திரத்திரம் எங்கள் அடிப்படை உரிமையாகும்,
பயங்கரவாத எதிர்ப்பு சட்டவரைவை மீளப்பெறல், சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது எங்களது சுதந்திரத்தை உங்களால் மட்டுப்படுத்த முடியாது, போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு அங்கிருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலமாக வீதி ஊடாக அரசடி சந்தியை அடைந்து அங்கிருந்து பொலிஸ் தலைமையக நிலைய வீதி சுற்று வட்டத்தை அடைந்து காந்தி பூங்காவை சென்றடைந்து.
பின்னர் அங்கு கோஷங்களை எழுப்பியவாறு பகல் 12 மணி வரையில் சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கிழக்கு மாகாண சிவில் சமூகத்துடைய வேண்டுகோள் இந்த பயங்கரவாத மற்றும் நிகழ்நிலை காப்புச் சட்டங்களை இல்லாமல் செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த பின்னர் அங்கிருந்து விலகிச் சென்றனர்.