எழுதுமட்டுவாழ் கிராமத்தில் உள்ள மாம்பழ உற்பத்தி வலயத்தை விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர
Share
பு.கஜிந்தன்
யாழ்ப்பாண தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட எழுதுமட்டுவாழ் கிராமத்தில் உள்ள மாம்பழ உற்பத்தி வலயத்தை விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர 15/10 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பார்வையிட்டிருந்தார்.
கடந்த 2018ஆம் ஆண்டு விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மேற்படி மாம்பழ உற்பத்தி வலயமானது 500செய்கையாளர்களை உள்ளடக்கியுள்ள நிலையில் விவசாய அமைச்சர் செய்கையாளர்களைச் சந்தித்து அவர்களுடைய குறை நிறைகளை கேட்டறிந்திருந்தார்.
இதன்போது விவசாயிகள், குரங்குகளை கட்டுப்படுத்த வாயுத் துப்பாக்கி,வீதிப் புனரமைப்பு மற்றும் மாம்பழத்தை சந்தைப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ,முன்னாள் விவசாய பிரதி அமைச்சருமான அங்கஜன் இராமநாதனுடைய ஏற்பாட்டில் குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.