LOADING

Type to search

இலங்கை அரசியல்

வவுனியாவில் ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவுதினம் அனுஸ்டிப்பு.

Share

(19-10-2023)

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 23 ஆவது நினைவுதினம் வவுனியா ஊடக அமையத்தில் .ன்று (19.10) மாலை அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா ஊடக அமையத்தின் தலைவர் ப.கார்த்தீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முதலாவது ஈகை சுடரினை சிரேஷ்ட ஊடகவியலாளர் கி. வசந்தரூபன் ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நிமலராஜனின் உருவப்படத்திற்கு ஏனைய ஊடகவியலாளர்கள் நினைவுச்சுடரை ஏற்றியதுடன் மலரஞ்சலியினையும் செலுத்தினர்.

அவர் தொடர்பான நினைவுப் பேருரையினை ஊடகவியலாளர் இ.சற்சொரூபன் நிகழ்த்தியிருந்தார். அவர் தனது உரையில்,

இலங்கையில் தமிழ் ஊடவியலாளர்கள் தொடர்ச்சியாக அடக்கு முறைக்கு உள்ளாகும் நிலமை நீடித்து வருகின்றது. அத்துடன் நிமலராஜன் உட்பட படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களிற்கான நீதி பல வருடங்களாக மறுக்கப்பட்டு வருகின்றது. அந்த கொலைகள் தொடர்பாக எவ்வித உள்நாட்டு விசாரணைகளோ அல்லது சர்வதேச விசாரணையோ இடம்பெறாமல் இருக்கின்றமையையிட்டு நாம் கவலையடைக்கின்றோம்.

இந்நிலையில் ஊடக சுதந்திரத்தினை பாதுகாப்பதுடன், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களிற்கான நீதியை பெற்றுக்கொடுப்பதில் உரியதரப்புக்கள் கரிசனையுடன் செயற்ப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.