LOADING

Type to search

இலங்கை அரசியல்

கேரளாவிலுள்ள தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்கள் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்

Share

கேரளாவில் மலையக மக்களின் உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற VTMS (விவசாயிகள் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம்) களத்தில் இறங்கி தொடர் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம், குளத்துப்புழா என்ற இடத்தில் தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக RPI என்ற ரப்பர் தோட்டக் கழகத்தை கேரள அரசும், ஒன்றிய அரசும் இணைந்து தொடங்கியது.

தாயகம் திரும்பிய 700 குடும்பங்கள் தங்களது உயிரை பணயம் வைத்து ரத்தத்தையும், வேர்வையையும் சிந்தி செல்வம் கொழிக்கும் பூமியாக மாற்றினர். தற்போது, தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக, VTMS மாநிலத் தலைவர் M.S. செல்வராஜ் தலைமையில் கேரள முன்னனி தலைவர்களுடன்,கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

இதனிடையே கடந்த செவ்வாய்க்கிழமை 31/10/2023 அன்று குலத்துப்புழாவில். மாபெரும் எழுச்சிக் கூட்டத்தை VTMS தலைவர்கள் கேரள முன்னணி தலைவர்களுடன் இணைந்து நடத்தினர் . இதில் நூற்றுக்கணக்கான ரப்பர்தோட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டு எதிர்கால செயல்பாடுகள் பற்றி நீண்ட விவாதம் நடத்தினர். மேலும் எதிர்கால செயல்பாடுகள் பற்றி திட்டமிடப்பட்டது.