LOADING

Type to search

இந்திய அரசியல்

ஜனநாயகமும், சமூக நீதியும் தழைத்தோங்கட்டுமென முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்

Share

ஜனநாயகமும், சகோதரத்துவமும், சமூக நீதியும் தழைத்தோங்கட்டுமென இந்திய அரசியலமைப்பு நாளையொட்டி தமிழக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய அரசியலமைப்புச் சட்டம், 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் இந்திய அரசியலமைப்பு நாளான 

இந்நாளில், இச்சட்டத்தை உருவாக்கியதில் அரும்பங்காற்றிய தலைவர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன். அரசியலமைப்பின் விழுமியங்களை நிலைநிறுத்தி, வளம்மிக்க தமிழ்நாட்டையும், ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்! ஜனநாயகமும், சகோதரத்துவமும், சமூக நீதியும் தழைத்தோங்கட்டும்! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.