மன்னாரில் சீனத் தூதுவர் தெரிவு செய்யப்பட்ட மீனவ குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகளை வழங்கினார்
Share
(மன்னார் நிருபர்)
(7-11-2023)
சீனாவில் உள்ள பௌத்த மக்களின் உதவியுடன் இலங்கையில் வறிய மக்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு 7ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் வங்காலையில் இடம்பெற்றது.
மன்னார் வங்காலையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் சீனத் தூதுவர் கீ செங்ஹோங் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.
-மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற உதவி திட்டம் வழங்கும் நிகழ்வில் சீனத் தூதுவர் கீ செங்ஹோங் கலந்து கொண்டு மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 450 மீனவ குடும்பங்களில் முதல் கட்டமாக 50 மீனவ குடும்பங்களுக்கு வழங்கி வைத்தார்.
மேற்படி உதவித் திட்டம் சீனாவின் பௌத்த சங்கம், இலங்கை மற்றும் சீன பௌத்த நட்புறவுச் சங்கம் ஊடாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட மீனவ குடும்பங்கள்,தள்ளாடி இராணுவ 541 வது படைப்பிரிவு அதிகாரி,அருட்தந்தையர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.