நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3வது பாராளுமன்ற 10வது அமர்வின் தொடர் கூட்டங்கள் கடந்த 2ம் 3ம் திகதிகளில் ரொறன்ரோ ஹோட்டல் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
Share
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3வது பாராளுமன்றத்தின் 10வது அமர்வின் தொடர் கூட்டங்கள் கடந்த 2ம் 3ம் திகதிகளில் ரொறன்ரோவில் அமைந்துள்ள ஹோட்டல் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. காலை தொடக்கம் மாலை வரை நடைபெற்ற இரண்டு நாள் அமர்வுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர். அமைச்சர்கள். மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இரண்டு நாட்களும் அமர்வுகளுக்கு சபாநாயகர் திருமதி முருகதாஸ் தலைமை தாங்கினார்.
பல்வேறு அமைச்சுக்கள் தொடர்பாக நடைபெற்ற விவாதங்களில் பல உறுப்பினர்கள் கடுமையான வாதங்களை முன்வைத்தனர். முக்கியமாக பிரதமர் அமைச்சுக்கள் கவனிக்க வேண்டிய விடயங்களை பிரதமர் அலுவலகம் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து வீணான கால தாமதத்தை ஏற்படுத்தி வருவதாகவும் இதனால் பயனாளிகள் பாதிக்கப்படுவதாகவும் முக்கிய விடயங்களாக முன்வைக்கப்பட்டிருந்தன.
மண்டபத்தில் நேரடியாகக் கலந்து கொண்டவர்களோடு இணைந்து இணைய வழியாகவும் பிரதமரும் ஏனைய அமைச்சர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
மேற்படி இரண்டு நாள் அமர்வுகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் பயனுள்ள வகையில் அமையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக கலந்து கொண்டு சில அங்கத்தவர்கள் ஊடகங்களோடு பகிர்ந்து கொண்டனர்.