LOADING

Type to search

இலங்கை அரசியல்

கொழும்பு இந்துக் கல்லூரி இளம் கிரிக்கெட் வீரர் ரிஷியுதனுக்கு கனடிய தமிழ் காங்கிரஸ் ஆதரவு

Share

கொழும்பு இந்துக் கல்லூரியின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரரான 10 வயது ரிஷியுதனின் குறிப்பிடத்தக்க திறமைக்கு கனடிய தமிழ் காங்கிரஸ் (CTC) தமது ஆதரவை வழங்குவதாக அறிவிதுள்ளது . சமீபத்தில் நடந்த பாடசாலை மட்டத்திலான கிரிக்கெட் போட்டியில், ரிஷியுதன் 9.4 ஓவர்கள் பந்து வீசி ஒரு ஓட்டம் கூட விட்டுக்கொடுக்காமல் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார் .

இந்த சாதனையை பாராட்டுவதற்காக , கனடிய தமிழ் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராஜ் தவரட்ணசிங்கம் டிசம்பர் 12 ஆம் திகதி ரிஷியுதனின் இல்லத்திற்குச் நேரில் சென்று வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், கிரிக்கெட் மீதான அவரது ஆர்வத்திற்கு கனடிய தமிழ் காங்கிரஸ் உதவி செய்யும் எனவும் தெரிவித்தார்

இதன் போது ரிஷியுதனின் குடும்பத்தின் வேண்டுகோளுக்கு இணங்க கனடிய தமிழ் காங்கிரஸ் ,குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு அத்தியாவசியமான முச்சக்கர வண்டியின் குத்தகையை முழுமையாக செலுத்தியது, இது அவர்களின் நிதிச் சுமைகளைத் குறைப்பதுடன் , ரிஷியுதனின் கிரிக்கெட் கனவுகளை அடைவதற்கு ஆதரவான சூழலை ஏற்படுத்தும்
19வது வயதில் இலங்கை தேசிய அணிக்காக விளையாடும் ரிஷியுதனின் கனவிற்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆதரவளிக்கும் என ராஜ் தவரட்ணசிங்கம் ரிஷியுதனின் பெற்றோரிடம் உறுதியளித்தார்.

கனேடிய தமிழ் காங்கிரஸ், தமிழ் சமூகத்தில் உள்ள திறமைகளை வளர்ப்பதில் அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது மற்றும் கலாச்சார பெருமை மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதில் விளையாட்டுகளின் முக்கிய பங்கை ஒப்புக்கொள்கிறது. ரிஷியுதன் போன்ற இளம் திறமையாளர்களின் கனவுகளை வளர்ப்பதில் அதன் அர்ப்பணிப்பை வலியுறுத்தி, கனடாவில் உள்ள தமிழ் சமூகத்தின் தொடர்ச்சியான ஆதரவிற்காக எமது அமைப்பு நன்றி தெரிவிக்கிறது.