LOADING

Type to search

இலங்கை அரசியல்

தி/உவர் மலைவிவேகானந்தா கல்லுாரி திறன் வகுப்பறை திறப்பு விழா

Share

01.12.2023 வெள்ளிக்கிழமை காலை 7.45 மணிக்கு கல்லுாரியின் முதல்வர் திரு. க. ரவிதாஸ் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வின் விருந்தினர்கள் அனைவரும் மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட்வாத்தியம் முழங்க வரவேற்கப்பட்டு ஆரம்பப்பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இலண்டன் மாநகரத்திலிருந்து வருகைதந்த நலன்விரும்பியான திரு.குமாரநாயகம் அவர்களால் ஆரம்பப்பிரிவிற்கான Smart ClassRoom கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டது அந்நிகழ்வில் தலைமை உரையை பாடசாலை முதல்வர் திரு. க. ரவிதாஸ் வரவேற்புரையை பிரதி அதிபர் திரு.ம. பிரகாஸ் அவர்களும் அவர்களும் நிகழ்த்தினர்.

இந்நிகழ்விற்கு வலயக்கல்வி அலுவலகத்திலிருந்து முன்பள்ளிக்கு பொறுப்பான உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.தவநாதன் அவர்கள் வருகைதந்து சிறப்பித்தார் அவர் சிறப்புரையாற்றும் போது வளர்ந்துவரும் பாடசாலையாக இப் பாடசாலை திகழ்கின்றது என்றும் எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுக்கத்தக்க வகையில் மாணவர்களை மகிழ்ச்சிகரமான கற்றல் செயற்பாட்டில் ஈடுபடுத்தி அடைவுமட்டத்தை மேம்பாடடையச் செய்யவேண்டும் எனவும் கூறினார். அடுத்தகட்டமாக தரம் 5 மாணவர்களுக்கு திருமதி. செல்வநளினி சுரேஸ்குமரன் ஆசிரியரால் திண்மஉருக்கள் பற்றி நவீனதொழில்நுட்பத்துடன் கற்பிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இடைநிலைப்பிரிவு மாணவர்களுக்கு நலன்விரும்பியான திரு. குமாரநாயகம் அவர்களால் சிறப்புரை ஆற்றப்பட்டது. இதில் மாணவர்களின் கல்வியறிவை மேம்படுத்தும் முகமாக இதன் பாவனையை தொடாச்சியாக பேணவேண்டும் எனவும் திறன் வகுப்பறை வசதி இல்லாத பின்தங்கிய பல பாடசாலைகளுக்கு மாணவர் நலன் கருதி இவ்வாறான வசதிகளை தங்கள் அமைப்பு மூலம் செய்து வருவதாகவும் கூறினார்.

இறுதியாக ஆரம்பப்பிரிவு பிரதிஅதிபர் திருமதி. த. விஸ்ணுகுமார் அவர்கள் தனது நன்றி உரையில் SMART BOARD எமது பாடசாலைக்கு கிடைத்தது ஓர் வரப்பிரசாதம் என்றும் இதன் மூலம் ஆரம்பக்கல்வியின் அடைவு மட்டத்தை மேம்படுத்த மிகவும் பயனுள்ளதாய் அமையும் என்றும் கூறி இத்தகைய நன்கொடையை வழங்கிய திரு குமாரநாயகம் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு பாடசாலை சார்பில் நன்றிகளை தெரிவித்து நிகழ்வினை நிறைவு செய்தார்.