வடக்கில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வது தொடர்பான கலந்துரையாடல்
Share
பு.கஜிந்தன்
வட மாகாணத்தில் எதிர்வரும் நாட்களில் காலநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் இணையவழி உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று (14.12.2023) மாலை நடைபெற்றது.
கடற்றொழில் அமைச்சரும் யாழ்/கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநரும், வடமாகாண மாவட்டங்களின் இணைத் தலைவருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மன்னார்/முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான காதர் மஸ்தான், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் குலசிங்கம் திலீபன் பா.உ, ஆகியோரின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர்கள், ஜனாதிபதி அவர்களின் மேலதிக செயலாளர் இளங்கோவன், யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பிரதீபராஜா, வட மாகாணத்திற்கு பொறுப்பான பொலிஸ்மா அதிபர், வட மாகாணத்தின் 5 மாவட்டங்களின் அனர்த்த நிவாரண முகாமைத்துவ பணிப்பாளர்கள், உட்பட துறைசார்ந்த அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.