LOADING

Type to search

இலங்கை அரசியல்

டெங்கு நுளம்பு பெருகும் அபாயகரமான இடமாக மாறியுள்ள சங்கானை செங்கற்படை பிள்ளையார் ஆலய சூழல்!

Share

வடமாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்குநோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியல் சுமார் 3100 பேருக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சில வாரங்களில் இரு மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் செங்கற்படை மஹாதேவா பிள்ளையார் ஆலய அருகிலுள்ள காணியில் பெருமளவான இளநீர் கோம்பைகள் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு டெங்கு நுளம்பு பரவும் பேரபாயம் காணப்படுகின்றது.

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்டதும், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் ஏழாம் வட்டாரத்தில் ஜெ/179 கிராமசேவகர் காணப்படும் இக்காணியில் ஆலய பூசைகளின்போது பயன்படுத்தப்பட்ட இளநீர் குரும்பைகள் தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பிந்திய தகவலாக யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் உச்சங்கண்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் அறிவித்துள்ளார்.

இம்மாதம் 18 ஆம் திகதிவரை 886 பேர் வைத்தியசாலைளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 19 ஆம் திகதியாகிய இன்று மட்டும் 111 டெங்கு நோயாளர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளனர். இதனால் டெங்கு நுளம்பு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி முழுமையாக யாழ்ப்பாண மாவட்டதில் இடம்பெறவுள்ளதாக மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அறிவித்துள்ளார்.