தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டம் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலயத்தில் முன்னெடுப்பு.
Share
(மன்னார் நிருபர்)
(24-12-2023)
தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டம் நேற்று சனிக்கிழமை (23) மாலை முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
குறித்த பாடசாலை மாணவர்களுக்கு சூழல் அறிவை புகட்டி அவர்களுக்கு சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலய அதிபர் கே.சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், கனடா- பல்லினப் பத்திரிகையாளர்கள் கழகத்தின் சிரேஸ்ட உப தலைவரும் ரொறன்ரோவின் மனித நேயக் குரல் அமைப்பின் ஸ்தாபக தலைவருமான என்.லோகேந்திரலிங்கம் கலந்து கொண்டார்.
இதன் போது தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் மற்றும் விவசாய போதனாசிரியர் ரி.துளசிராம் ஆகியோர் மாணவர்களுக்கு சிறப்புரைகளை நிகழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு ரொறன்ரோவின் மனித நேயக் குரல் அமைப்பினால் பாடசாலை அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது.
வன்னி மண்ணின் முல்லைத்தீவு- கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கான அப்பியாசக்கொப்பிகள் மற்றும் எழுதும் கருவிகள் கையளிக்கும் வைபவத்தில் நேரடியாகக் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிட்டியதில் கிடைத்த மனநிறைவு மிக அதிகம்.
22-12-2023 அன்று சனிக்கிழமை இடம்பெற்ற இந்த நிகழ்வு சாத்தியமாகியமைக்கு காரணமாக அமைந்தவர்கள் மூவர். தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் வட மாகாண அமைச்சருமான பொ.ஐங்கரநேசன். கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலய அதிபர் திரு. க. நரேந்திரன் மற்றும் கொக்குத்தொடுவாய் பிரதேச விவசாய போதனாசிரியர் துளசிராம் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள். இந்த மூவரின் மனித நேயப்பண்பபை நாம் மெச்சுகின்றோம்.
அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த காரணமாக அமைந்தவர்கள் கனடாவில் இயங்கிவரும் ‘ரொறன்ரோ மனித நேயக்குரல்’ அமைப்பிற்கு தங்கள் அன்பளிப்புக்களை வழங்கிவரும் ‘சக்தி’ ஞானம்மா திருநாவுக்கரவு அவர்கள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்களான கணேசன் சுகுமார், சங்கர் நல்லதம்பி- சாந்தா பஞ்சலிங்கம்- நிமால் விநாயகமூர்த்தி-பாஸ்கரன் சின்னத்துரரன்- பாஸ்டர் சோதி- ரஜீவ் செபராசா- குலா சின்னத்துரை உட்பட பல அன்பர்களுக்கு ‘ரொறன்ரோ மனித நேயக்குரல்’ அமைப்பின்’ தலைவர் என்ற வகையில் திரு ஆர். என் லோகேந்திரலிங்கம் இந்த வைபவத்தில் நன்றி தெரிவித்தார். இங்கே காணப்படும் மாணவி அன்றைய நிகழ்வில் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் கவிதை ஒன்றை உணர்வோடு வாசித்தமை பாராட்டுக்குரியது