மட்டு நகரில் பொது சுகாதார பரிசோதகர்கள் வீதியோர வியாபார நிலையம் முற்றுகை 7 வியாபாரிகளிடம் பாவனைக்கு உதவாத பெருமளவிலான பொருட்கள் மீட்பு
Share
(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு நகர் மற்றும் கல்லடி பகுதிகளில் வீதியோரங்களில் வியாபாரத்ங்களில் ஈடுபட்டுவரும் வியாபார நிலையங்களை இன்று வியாழக்கிழமை (4) மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் முற்றுகையிட்டு 7 வியாபார நிலையங்களில் மனித பாவனைக்கு உதவாத கரட், கருவா: வாழைப்பழம், ஒரேஞ், இனிப்புபண்டமான பூந்தி ஆகிய பெருமளவிலான பொருட்களை கைப்பற்றியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் த.மிதுன்ராஜ் தெரிவித்தார்.
மட்டு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்களான த.மிதுன்ராஜ், சோதிராஜா அமிர்தன், சோமசுந்தரம் யசோதன் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவதினமான இன்று காலை 10 மணியளவில் கல்லடி பொது சந்தை சதுக்கம், கல்லடி, திருகோணமலைவீதி, அரசடி, ஊறணி போன்ற பகுதிகளில் வீதியோரத்தில் மரக்கறிவகைகள்,பழவகைகள், மீன்கள் கருவாடு போன்ற பொருட்களை வீதியோர வியாபாரம் செய்துவரும் வியாபார நிலையங்களை முற்றுகையிட்டு பரிசோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதன் போது மனித பாவனைக்கு உதவாத வாழைப்பழம், ஒரேஞ், உணவு பண்டமான தேன்குழல், கருவாடு கரற், போன்ற பொருட்களை 7 வியாபார நிலையங்களில் இருந்து கைப்பற்றியுள்ளதுடன் அவற்றை அழிக்கும் நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.