இலங்கையிலிருந்து எம். பி மனோ கணேசன், கனடாவிலிருந்து ஒன்றாரியோ எம்பிபி லோகன் கணபதி ஆகியோர் அயலக தமிழர் விழாவில் அதிதிகளாக தமிழக அரசின் அழைப்பில் சென்னை பயணம்
Share

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், ஜனவரி 11, 12 ம் திகதிகளில் சென்னையில் நடைபெறும் அயலக தமிழர் விழாவில், தமிழக அரசின் அழைப்பையேற்று கலந்துக்கொள்வதற்காக, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் சென்னைக்கு பயணித்துள்ளார்.
இதேவேளையில் கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் பாராளுமன்ற உறுப்பினரும் முக்கிய அமைச்சொன்றின் பாராளுமன்றச் செயலாளருமான லோகன் கணபதி அவர்களும் சிறப்பு அதிதியாக சென்னை சென்றுள்ளார்.
இவர் விமானநிலையத்திற்குச் செல்லுமுன்னர் கனடா உதயன் ஆசிரிய பீடத்தோடு தொடர்பு கொண்டு உரையாடுகையில்’ எனது தமிழ் நாட்டுக்கான பயணத்தின்போது அங்குள்ள தமிழ் உ ணர்வாளர்களோடும் கலந்துரையாடல்களை நடத்தி ஆக்கபூர்வமான செய்திகளோடு திரும்புவேன் என்று தெரிவித்துள்ளார்.