LOADING

Type to search

கனடா அரசியல்

“கனடாவில் தமிழ் மொழியையும் தமிழர் கலைகளையும் வளர்ப்பதில் தமிழ் ஊடக நிறுவனங்களின் பங்களிப்பைக் கண்டு வியக்கின்றேன்”

Share

‘அனலை எக்ஸ்பிரஸ்’ ஊடகக் குழுமம் கனடாவில் நடத்திய ‘பாரம்பரியம்’ முழு நீள முத்தமிழ் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஒன்றாரியோ மாகாணத்தின் கல்வி அமைச்சர் புகழாரம்

” நான் ஒன்றாரியோ மாகாணத்தின் கல்வி அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் பாடசாலைகளில் கல்வி கற்றுவரும் தமிழ் பேசும் மாணவ மாணவிகளை சந்தித்து உரையாடியிருக்கின்றேன். அத்துடன் இங்குள்ள தமிழ் மொழி சார்ந்த பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகங்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் நெருக்கமாகப் பழகி வருகின்றேன். இவ்வாறான நிலையில். கனடாவில் தமிழ் மொழியையும் தமிழர் கலைகளையும் வளர்ப்பதில் தமிழ் ஊடக நிறுவனங்களின் பங்களிப்பைக் கண்டு வியக்கின்றேன்”

இவ்வாறு கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற ‘அனலை எக்ஸ்பிரஸ்’ ஊடகக் குழுமம் கனடாவில் நடத்திய ‘பாரம்பரியம்’ முழு நீள முத்தமிழ் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஒன்றாரியோ மாகாணத்தின் கல்வி அமைச்சர் புகழாரம் சூட்டினார்.

அன்றைய தினம் ஒன்றாரியோ மாகாண கல்வி அமைச்சருடன் ஒன்றாரியோ மாகாண அரசின் போக்குவரத்து துறை இணைஅமைச்சர் விஜே தணிகாசலம். மாகாண சபை உறுப்பினரும் அமைச்சொன்று பாராளுமன்றச் செயலாளருமான லோகன் கணபதி மற்றும் மாகாண சபை உறுப்பினர் அரிஸ் பாபிகியன் ஆகியோர் அங்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழா ஏற்பாட்டாளர்களை வாழ்த்தி உரையாற்றினார்கள்.

‘அனலை எக்ஸ்பிரஸ்’ ஊடகக் குழுமத்தின் தலைவரும் நண்பருமான விமல் தவராஜா அவர்கள் தனது துணைவியாளர் மற்றும் சக ஊடகவியலாளர்கள் சகிதம் மிகவும் கச்சிதமான முறையில் இவ்வருடத்தின் ‘பாரம்பரியம்’ முத்தமிழ் விழாவை நடத்தினார்.

அவரை வாழ்த்தி பலரும் உரையாற்றினார்கள்.

அன்றை முத்தமிழ் விழாவில் இயல் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளில் சுமார் 500 கலைஞர்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது