மட்டு நகரில் 100 வருடம் பழமை வாய்ந்த இத்திமரம் வேருடன் சரிந்து வீழ்ந்ததில் வாகன கராச் கட்டிடம் 3 வாகனங்கள் சேதம்
Share
(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு நகர் அரசடியில் பகுதியிலுள்ள ஸ்ரீ மகா பெரிய தம்பிரான் ஆலய வளாகத்தில் இருந்த 100 வருடங்கள் பழமை வாய்ந்த இத்தி மரம் புதன்கிழமை (மாலை) ஏற்பட்ட பெற்ற சுழல் காற்றினால் அடியோடு சரிந்து விழ்ந்துள்ள தையடுத்து வாகனம் திருத்தும் நிலையத்தின் கட்டிடம் ஒன்று சேதமடைந்துள்ளதுடன் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 3 வாகனங்கள் சேதமைந்துள்ளன..
சீரற்ற காலநிலைகராணமாக பெய்துவந்த அடைமழையுடனான காற்று சம்பவதினமான நேற்று முன்தினம் வீசியதையடுத்து குறித்த மரம் வேருடன் சரிந்து அருகிலுள்ள வாகனம் திருத்தும் நிலையத்தின் கட்டித்தின் மேல் வீழ்ந்ததையடுத்து கட்டிடம் பலத்த சேதமடைந்துள்ளதுடன் அங்கு நிறத்திவைக்கப்பட்டிருந்த கார், கனரகவாகனம் முச்சக்கரவண்டி உட்பட 3 வாகனங்கள் சேதடைந்துள்ளதுடன் மரத்தை வெட்டி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என அறியப்படுகின்றது.