வடக்கு இலங்கையில் இந்தியாவின் நடவடிக்கைகளை உளவு பார்க்கும் சீனாவிற்கு உதவியாக பாகிஸ்தானியர்களும் களம் இறக்கப்பட்டுள்ளனர் என்பது நிரூபணமாகின்றது.
Share
நடராசா லோகதயாளன்
கடந்த மாதம் 19ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையில் தமிழகத்தின் சென்னை மற்றும் இராமேஸ்வரம் பகுதிகளில் இந்தியப் பிரதமர் மோடி பயணித்த சமயம் இலங்கையின் வடக்கே மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் அதிகளவு பாகிஸ்தானியர்கள் நடமாடியுள்ளனர்.
இந்தளவு பாகிஸ்தானியர்கள் வடக்கில் இதுவரை நடமாடியமை கிடையாது என வடக்கு வாழ் தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.
சீனர்களின் நடமாட்டம் காணப்படும்போது அவர்களை இலகுவில் அடையாளம் காண முடிகிறது என்றும் அவர்கள் நான்கு சில்லு வாகனங்களிலும் உள்ளூர் மக்கள் போன்று மோட்டார் சைக்கிலும் பயணிக்கும் அதேநேரம், இலங்கை, இந்திய மக்களின் முக சாயலை ஒத்த பாகிஸ்தானியர்கள் தற்போது நடமாடுவது இலகுவில் கண்டுகொள்வதும் கடினமாகவே உள்ளது என்று உள்ளூர் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்..
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் ஆறிற்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் ஏன், எதற்கு எனத் தெரியாது தங்கியிருப்பதோடு கொக்குவில் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய சமயம், அவர்கள் பொதுமக்களால் பிடித்து யாழ்ப்பாணம் பொலிசாரிடம் ஒப்படைத்த போதும் சிறிது நேரத்தில் பொலிசார் அவர்களை விடுவித்து விட்டனர்.
இருந்தபோதும் பல பாகிஸ்தானியர்கள் யாழ்ப்பாணத்திலேயே தங்கியுள்ளனர். யாழில் தங்கியிருப்பவர்கள் அடிக்கடி தமது இருப்பிடத்தை மாற்றுகின்றனர்.
இதேநேரம் இவர்களின் வருகை பாரதப் பிரதமர் தமிழ் நாட்டிற்கு வந்தபோது அமைந்துள்ளமையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படுகின்றமையினல் கொக்குவில் பகுதியில் நடமாடிய பாகிஸ்தானயர் ஒருவரின் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பொதுமக்கள் ஒளிப்படம் எடுத்துள்ளனர்.
இதேநேரம் இவர்களுடன் இரு உள்ளூர் இஸ்லாமியர்கள் இணைந்தே நடமாடுகின்றனர். அதில் ஒருவர் கடந்த ஆண்டு பாகிஸ்தானியத் தூதுவர் யாழ்ப்பாணம் வருகை தந்தபோது யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனைச் சந்தித்தபின்பு மேற்கொண்ட சந்திப்பில் மொழி பெயர்ப்பாளராக செயல்பட்டவர். இவர் சரளமாக உறுது மொழி பேசும் வல்லமை கொண்டவர். இவர் பாகிஸ்தானின் கராச்சியில் கல்வி கற்றதனால் உறுது மொழியும் கற்றுக்கொண்டார்.
இதேநேரம் யாழில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் யாழில் உள்ள இடைநிலை அரசியல்வாதகள் சிலரையும் சந்தித்துப் பேசியுள்ளபோதும் என்ன பேசினார்கள் என அறியமுடயவில்லை.