LOADING

Type to search

கனடா அரசியல்

கனடா தமிழ்ச் சங்கம், 28-01-2024 அன்று நடத்திய முப்பெரும் திருவிழாவில் வாழ்நாள் சாதனையாளர்கள் விருது பெற்ற மூவர்.

Share

கனடா தமிழ்ச் சங்கம், 28-01-2024 அன்று நடத்திய முப்பெரும் திருவிழா ஈற்றோபிக்கோ நகரில் உள்ள ஶ்ரீங்கரி சன சமூக நிலைய கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் தவைரும் வீடு விற்பனை முகவரும் சமூக அக்கறை கொண்டவருமான வள்ளிக்கண்ணன் மருதப்பன் தனது சக அங்கத்தவர்கள் அனைவரோடு இணைந்து சிறப்பாகச் செய்திருந்தார்.

விழாவின் பிரதம விருந்தினராக Consul General Sh. Siddhartha Nath ரொறன்ரோவிற்கான இந்தியத் துணைத் தூதுவர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பின்னர் வாழ்நாள் சாதனையாளர்கள் விருது பெற்ற மூவர்கள்.:-

மருத்துவர் சுதர்ஷன் தேவநேசன்
மருத்துவம், சமூக சேவை
வடஅமெரிக்க தமிழ் வாழ்நாள் சாதனையாளர் விருது

பேராசிரியர் கலாநிதி நாகராஜ ஐயர் சுப்பிரமணியன்
தமிழ் இலக்கியம், தமிழாய்வு
வடஅமெரிக்க தமிழ் வாழ்நாள் சாதனையாளர் விருது

ஆர்.என்.லோகேந்திரலிங்கம்
ஊடகப்பணி ஆகியோருக்கான விருதுகளை வழங்கிக் கௌரவித்தார். தொடர்ந்து
முப்பெரும் திருவிழாவில் இவ்வருடத்தின் வடஅமெரிக்க தமிழ் மேன்மையாளர் விருதுகள் பெற்ற 9 சாதனையாளர்கள்

விஜய் மணிவேல்
சமூக சேவை
வடஅமெரிக்க தமிழ் மேன்மையாளர் விருது

பரமநாதன் விக்னேஸ்வரன்
ஊடகப்பணி, நாடகக்கலை
வடஅமெரிக்க தமிழ் மேன்மையாளர் விருது

பிரகாஷ் வெங்கடராமன்
தொழில், சமூகப்பணி
வடஅமெரிக்க தமிழ் மேன்மையாளர் விருது

பொன்னையா விவேகானந்தன்
தமிழ் கல்வியாளர்
வடஅமெரிக்க தமிழ் மேன்மையாளர் விருது

ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா
தமிழ் இலக்கியம், கல்வி, மொழிபெயர்ப்பாளர்
வடஅமெரிக்க தமிழ் மேன்மையாளர் விருது

அகணி சுரேஸ்
தமிழ் எழுத்தாளர், சமூகப்பணி
வடஅமெரிக்க தமிழ் மேன்மையாளர் விருது

கிஷோர் சுப்ரமணியன்
வணிகம் மற்றும் வழக்கறிஞர்
வடஅமெரிக்க தமிழ் மேன்மையாளர் விருது

ராகமாலிகா மோகன்ராஜ்
பரதக் கலைஞர்
வடஅமெரிக்க தமிழ் மேன்மையாளர் விருது

ஜோஷ்வா சுப்புராஜ்
உடற்பயிற்சி பயிற்சியாளர்
வடஅமெரிக்க தமிழ் மேன்மையாளர் விருது

ஆகியோருக்கு பல்வேறு துறை சார்ந்த பிரமுகர்கள் அன்னைய தினம் விருதுகளை வழங்கிக் கௌரவித்தார்கதள்.

விழாவை நடத்தியவர் கனடா தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான வள்ளிக்கண்ணன் மருதப்பன் அவர்கள்

மேலும் காலை 10.00 மணி தொடக்கம் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த மாயாஜால வித்தைகளின் வித்தகர் சாக் வசந்த் அவர்களது மாயாஜாலக் காட்சிகளும் இடம்பெற்று அவை சபையோரால் நன்கு ரசிக்கப்பெற்று வியந்தும் பாராட்டப்பெற்றன.