LOADING

Type to search

கனடா அரசியல்

Truck Training Schools Association of Ontario, hosted its Annual Convention in Mississauga.

Share

Associate Minister of Ontario’s Ministry of Transportation, Mr. Vijay Thanigasalam, graced the event as Guest Speaker.

ஒன்றாரியோ கனரக வாகன சாரதிப் பயிற்சி நிறுவனங்கள் சங்கத்தின் மாநாட்டில் சிறப்புப் பேச்சாளராகக் மாகாண போக்குவரத்து துணை அமைச்சர் விஜேய் தணிகாசலம்

கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் ‘ஒன்றாரியோ கனரக வாகன சாரதிப் பயிற்சி நிறுவனங்கள் சங்கத்தின்’ வருடாந்த மாநாடு 29-02-2024 வியாழக்கிழமையன்று மிசிசாகா நகரில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.

மேற்படி மாநாட்டில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்ட மாகாணத்தின் போக்குவரத்து அமைச்சின் துணை அமைச்சர் விஜேய் தணிகாசலம் அவர்கள் அங்கு பயனுள்ள உரையாற்றியதாக தமிழ் பேசும் அன்பரும் மேற்படி ‘ஒன்றாரியோ கனரக வாகன சாரதிப் பயிற்சி நிறுவனங்கள் சங்கத்தின்’ நீண்ட கால உறுப்பினரும் எமது மத்தியில் இயங்கிவரும் .. ‘Jays Professional Truck Training Centre நிறுவனத்தின் தலைவருமாகிய ஜேய் ஜெயானந்தன் எமது ஆசிரிய பீடத்திற்கு தகவல் தருகையில் அங்கு உரையாற்றிய எமது மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் விஜேய் தணிகாசலம் அவர்களின் உரையை பல்வேறு மொழிகளைப் பேசும் பயிற்சி நிறுவனங்களின் அதிபர்கள் பாராட்டிச் சென்றார்கள் என்றும் தெரிவித்தார்.

மாகாணத்தின் போக்குவரத்து அமைச்சின் துணை அமைச்சர் விஜேய் தணிகாசலம் அவர்கள் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் தற்போது ஒன்றாரியோ மாகாணத்தில் கனரக வாகனங்களின் தேவை அதிகரித்துள்ளதால் அவைகளுக்கான சாரதிகளின் தேவைகளும் அதிகரித்துள்ளன என்றும் , அதற்கான முயற்சிகளில் தங்களை ஈடுபடுத்தி தங்கள் கனரக வாகன பயிற்சி நிறுவனங்களின் மூலம் ஏராளமான சாரதிகளை உருவாக்கும் அதன் நிர்வாகிகளையும் பயிற்றுவிக்கும் போதானசிரியர்களையும் பாராட்டுகின்றேன் என்று தெரிவித்ததுடன் கனரக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பெருந்தெருக்களின் இளைப்பாறும் நிலையங்களில் மேலதிக கனரக வாகன தரிப்பிடங்களை ஏற்படுத்தும் வகையில் தமது அமைச்சினால் திட்டங்கள் தயாரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இங்கே காணப்படும் படத்தில் தமிழ் பேசும் அன்பரான திரு ஜேய் ஜெயானந்தன் மற்றும் High Liteகனரக போக்குவரத்து நிறுவனத்தின் உப-தலைவர் உட்பட சங்கத்தின் உறுப்பினர்கள் எமது துணை அமைச்சர் விஜேய் தணிகாசலம் அவர்களோடு நிற்பதைக் காணலாம்.