LOADING

Type to search

இலங்கை அரசியல்

பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ள முல்லை மாவட்ட ஊடகவியலாளர் திருச்செல்வம் திவாகர்

Share

எமது மன்னார் செய்தியாளர்

இலங்கையின் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13.03.2024) விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரபல ஊடகவியலாளரான திருச்செல்வம் திவாகர் அவர்கள 13-03-2024 வியாழக்கிழமை முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் அமைந்துள்ள குறித்த ஊடகவியலாளரின் வீட்டிற்கு சென்ற அளம்பில் பொலிஸார் இந்த அழைப்பினை எழுத்துமூலம் வழங்கியுள்ளனர். என்றும் அவரை எச்சரிக்கும் வகையில் இந்த கடிதம் நேரடியாக வழங்கப்பட்டதாகவும் அ றிவிக்கப்பட்டுள்ளது குறித்த கடிதத்தில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் ஆராச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக கீழ் பெயர் குறிப்பிடப்படும் ஊடகவியலாளரை 2024 .03.15 ஆம் திகதி இல 149, பூட்டானி கெப்பிடல் கட்டிடம், கிருளப்பனை அவநியூ , கொழும்பு – 05 என்ற விலாசத்தில் அமைந்துள்ள தலைமை காரியாலயத்திற்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

மேற்படி ஊடகவியலாளரின் முழுப் பெயர் – திருச்செல்வம் திவாகர் விலாசம் 6ஆம் வட்டாரம், குமுழமுனை முல்லைத்தீவு என முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரியின் ஒப்பத்துடன் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் குறித்த ஊடகவியலாளரான திவாகர் புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளி என்பதும். பல ஊடகங்களில் பணியாற்றியுள்ளவர் என்பதும் தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட ஊடக அலுவலகராக கடமையாற்றுவதோடு முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தின் உப தலைவராகவும் சுயதீனமான ஊடகவியலாளராகவும் இருந்துவருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது