LOADING

Type to search

கனடா அரசியல்

கனடாவில் வெற்றிகரமாக நடைபெற்ற ‘வன்னிவிழா 2024’

Share

-குமுளன் –

கடந்த 23.03.2024 அன்று 3840 Fince Av Eastல் Metropolitan Centrer இல் அமைந்துள்ள பிறின்சஸ் கலையரங்கில் மிகக் கோலாகலமாக இடம்பெற்றது “வன்னிவிழா-2024”. வன்னிச் சங்கத்தின் தலைவர் சிவா இரட்ணசிங்கம் அவர்களின் தலைமையில் மேற்படி விழா இடம்பெற்றது. பி.ப. 6.00 மணிக்கு பண்டாரவன்னியனின் உருவப்படம் திரைநீக்கம் செய்யப்பட்டததைத் தொடர்ந்து மங்கல விளக்கு முன்னைநாள் தலைவரகள், காப்பாளர்கள் மற்றும் பிரமுகர்களினால் மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டது.

கொடிக்கீத்தை உறுப்பினர் கு. உதயகுமார் இசைதத்ததைத் தொடர்ந்து கனடா நாட்டுப்பண் செல்வி யாமினி தமிழ்ச்செல்வனால் இசைக்கப்பட்டது.

கலைக்கோவில் நாட்டியப்பள்ளி ஆசிரியை ஶ்ரீமதி வனிதா குகேந்திரனின் மாணவியரின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. எடுத்த எடுப்பிலேயே நிழ்ச்சி களைகட்டுத் தொடங்கியமைக்கான தொடக்கப்புள்ளியாகக் காணப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கனடா வன்னிச் சங்கத்தின் செயற்பாடுகள் குறித்த சுருக்கமான அறிமுகத்தை செல்வி ஜஸ்மிதா சிவரூபன் செய்ததைத் தொடர்ந்து நடன ஆசிரியை ஶ்ரீமதி ரேணுகாதேவி விக்கினேஸ்வரனி மாணவிகளின் “ஓம் சக்தி நடனம்” மேடையேற்றப்பட்டது. இந்த நடனத்தை கௌசிகா வரதராஜா மற்றும் குபேரகா குமரேஸ்வரன் ஆகிய இருவரும் வடிவமைத்து மேடையேற்றியமை குறிப்பிடத்தக்கது. மக நேர்த்தியான பரதநடனம் சபையோரின் கரஒலியால் பாராட்டப்பட்டது.

நடன ஆசிரியை ஶ்ரீமதி ரேணுகாதேவி விக்கினேஸ்வரனுக்கான கௌரவத்தினை முனைவர் பார்வதி கந்தசாமி அவர்கள் வழங்கிவைக்க நடன அமைப்பாளராகிய செல்வி குபேரகா குமரேஸ்வரன் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட . செந்தில் குமரன் அவர்கள் சிறப்புரையாற்றினார். வன்னிச் சங்கத்தோடு இணைந்து தாயகத்தில் மருத்துவ மற்றும் மருத்துவ உதவி பெற்ற குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளையும் செய்து ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றுவது எனது பணி. நான் நூற்றுக்கு மேற்பட்டவர்களின் இதய அறுவைப் பணிக்காக நிதியுதவியை வன்னிச் சங்கம் போன்ற வெளிநாட்டு அமைப்புகளினதும் தனியாரிடமிருந்தும் பெற்று செய்துள்ளேன். தொடர்ந்தும் இச் சேவையைச் செய்து வருவதற்கு உதவும் உங்களைப் போன்ற நல்லமனது படைத்தவர்களின் ஆதரவினால் தான் முடிகின்றது என்பதைக் குறிப்பிட்டதோடு தற்போது மல்லாவி, மாஞ்சோலை வைத்தியசாலைகளுக்கு நீரிழிவு நோயாளருக்கான இரத்தச்சுத்திகரிப்பு (Dialysis) இயந்திரங்களை வாங்கி வழங்கியிருக்கின்றார். தண்ணீரூற்று மாஞ்சோலை வைத்தியசாலையில் இதயச் சந்திரசிகிச்சைக்கான Gordiology காடியோலொச்சி யூனிற் ஒன்றினைத் தொடங்குவதற்கான நிதியினைப் பொதுமக்களிடம் திரட்டி அதனையும் அங்கு திறந்து வைத்துள்ளார். தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு (Scarnner) ஒன்றினை வாங்கி வழங்குவதற்கான நடவடிக்கைகளைச் செய்துகொண்டிருப்பதையும் குறிப்பிட்ட அவர் தொடர்ந்து உரையாற்றும்போது வன்னிச் சங்கத்தினது நிதியுதவியோடு வன்னியில் உள்ள மாணவர்களின் கண் தொடர்பான பார்வைக் குறைவு, முதுகெலும்பு தொடர்பான நோயுடைய பிள்ளைகளை இனங்கண்டு அவர்களுக்கான உதவியை மேற்கொள்ள எனக்குக் கரம்கொடுத்து உதவியவர்கள் இன்றும் பேராதரவு நல்கிவருபவர்கள் வன்னிச் சங்கத்தினர் என்றும் பாராட்டிய அவர் தொடர்ந்து வன்னிப் பிள்ளைகளின் கல்வியில் முழு அக்கறை கொண்டு செயலாற்றி வருவதை நான் நேரடியாகவே கண்டு வியப்பற்றோன்.

அவர்களது இந்தக் கல்விப்பணியானது எங்கள் இளஞ் சமுதாயத்தின் இருப்பினையும், வளர்ச்சியினையும் தக்கவைக்க உதவுகின்றது என்பதை எடுத்துக்கூறுவதில் மகிழ்சியடைகின்றேன் என்று பாராட்டினார்.

இதனையொட்டி தாயகத்தில் கனடா வன்னிச் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்திட்டங்கள் பற்றிய விவரணக் காணொளி திரையிடப்பட்டது. அக்காட்சிகளைக் கண்ணுற்ற பார்வையாளர்கள் வியந்து நோக்கினர் என்பதை அவதானிக்கமுடிந்தது.

அதனைத் தொடர்ந்து “வீரத் தமிழிச்சி குருவிச்சி நாச்சியார்” என்னும் நாட்டிய நாடகம் மேடையேறியது. இந்த நாட்டிய நாடகத்தை வடிவமைத்து நெறியாளுகை செய்தவர்கள் கலைக்கோயில் நாட்டியப் பள்ளியின் இயக்குநர்களான ஶ்ரீமதி வனிதா குகேந்திரன் மற்றும் அவரது துணைவர் மிருதங்க வித்தகரும் பொறியியலாளருமான . குகேந்திரன் அவர்களுமாவார். இந்த நாட்டிய நாடகத்தில் கிட்டத்தட்ட 65 மாணவ மாணவியர்கள் பற்கேற்றனர் என்பது குறப்பிடத்தக்கது. திரைப்படம் ஒன்றைப் பார்ப்பதுபோன்ற ஒரு விறுவிறுப்பான கதையம்சத்தைக் கொண்ட நாட்டிய நாடகமாக அமைக்கப்பட்டிருந்தமையால் சபை மிக அமைதியாக வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தமையைக் காணமுடிந்தது. 45 நிமிட நேரங் கொண்ட முழுநீள நாட்டிய நாடகத்தினை அரங்கேற்றிய ஆசிரியைக்கான கௌரவ விருது தவமணி கருணைநாதன் வழங்கிக் கௌரவித்தார்.

கனடாதமிழ் சங்ககத்தின் நிறுவனரும் தலைவரும் படிமுறைத் தமிழ், வேரும் விழுதும் அகிய நூல்களின் ஆசிரியரும் தமிழை மாணர்கள் கற்கவேண்டும் எனப் தமிழர் வாழும் நாடுகளுக்கெல்லாம் சென்று ஊக்குவித்து வருபவருமாகிய . சு.இராஜரட்ணம் அவர்களால் பிரதம விருந்தினர் உரை நிகழ்த்தப்பட்டது. அவர் உரையாற்றும்போது பிள்ளைகளுக்குத் தமிழ்க் கல்வியை ஊட்டவேண்டிய முக்கியத்துவத்தையும் அதில் பெற்றோரின் பங்கும் ஆசிரியர்களின் பங்கும் பற்றிய விளக்கத்தைத் தந்து பிள்ளைகளின் கல்வியில் அக்கறைகொண்டிருப்பதன் அவசியத்தை குறிப்பிட்டார். தமிழைத் தக்கவைக்க தமிழ்ப்பிள்ளைகள் தமிழை முறையாகக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு அதற்கான பணிகளை நான் மேற்கொணடு வருகின்றேன் என்றார்.

பிரதம விருந்தினர் உரையைத் தொடர்ந்த தென்னிந்திய, இலங்கை மற்றும் கனடிய இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சி இடம் பெற்றது. இசை நிகழ்ச்சியின் இடையிலே கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வன்னிச் சங்கத்தின் தலைவர் . சிவகுமாரன் இரட்ணசிங்கம் அவர்கள் உரையாற்றும் போது வன்னியில் இடம்பெற்ற பல்வேறு அழிவுகள் மத்தியிலும் எமது எதிர்காலச் சந்ததியைக் கட்டி எழுப்பும் நிலையில் கல்விக்கான உதவிகளை நாம் கிராமங் கிராமமாகச் செய்துவருகின்றோம்என்ற அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் இறைய அன்றைய விழா மண்டபம் நிறைந்த மக்கள் கொண்ட விழாவாகவும் நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்புவாய்ந்த நிகழ்ச்சிகளாக அமைவதற்கும் போருதவி புரிந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்ததோடு மட்டுமல்லாது கனடா வன்னிச் சங்கம் தொடர்ச்சியாகச் செய்து வருகின்ற செயற்திட்டங்கள் பற்றியும் சபையோருக்கு எடுத்துக் கூறினார். சிறப்பாக வன்னிச் சங்கம் நீண்ட காலமாக செய்து வருகின்ற கல்விப் புலமைப்பரிசில் திட்டம் பற்றியும் எடுத்து விளக்கிக் கூறி ஆதரவைத் தொடர்ந்து தரும்வண்ணம் சபையோரிடம் கோரிக்கையை வைத்தார்.

இசை நிகழ்ச்சியில் வவுனியாவில் இருந்து வருகை தந்திருந்த இசையமைப்பாளரும் பாடகருமான திருவாளர்கள் கந்தப்பு ஜெயந்தன், மற்றும் இந்திய சுப்பர்சிங்கர் பாடகரான கரிகரசுதன், செந்தில்குமரன், , கார்த்திக், கிளாட்சன் மற்றும் செல்விகள் அபிராமி, கர்சிதா ஆகியோர் திரை இசைப் பாடகளைப் பாடிச் சபையோரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினர். ‘குருவிச்சி நாச்சி’ நாட்டிய நாடகத்திற்காக மூன்று பாடல்களை இசையமைத்துத் தந்தமையையும் கனடாவிற்கு வருகை தந்து இசைக் குழுவில் பாடியமையையும் கௌரவித்தும் பாடகர் கந்தப்பு ஜெயந்தன் அவர்களைக் கௌரவித்து விருதினை அம்பிகா நகைமாடத்தின் அதிபரான திருமதி ஜெயசீலி இன்பநாயம் அவர்கள் வழங்கிக் கௌரவித்தார்.

பின்னணி இசையை நல்கிய குழுவின் தலைவர் சிபோதன் அர்களுக்குப் பாராட்டு விருதினை வழங்கிக் கௌரவித்தார் ஓய்வு பெற்ற கொத்தணி அதிபரும் வன்னிச்சங்கத்தின் காப்பாளருமான . த. சிவபாலு அவர்கள்.

கனடா வன்னிச் சங்கத்தின் செயலாளர் திரு பொ. சிவசுதன் அவர்களினால் விழாவினை ஒழுங்கமைத்து நடாத்துவதற்கு உறுதுணையாக இருந்த வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகையாளர்கள், சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள், வர்த்தகப் பெருமக்கள், நன்கொடையாளர்கள் மற்றும் வருகை தந்து சிறப்பித்த பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.

இந்த நிகழ்வை திருவாளர் ஜஸ்ரின் போல் மற்றும் செல்வி ஜஸ்மிதா சிவரூபன் ஆகிய இருவரும் அழகுதமிழில் தொகுத்துவழங்கிப் பார்வையாளர்கள் அனைவரினதும் பாராட்டுக்களைப் பெற்றுக் கொண்டனர். விழா 11.00 மணிக்கு நிறைவெய்தியது.