‘’எமது கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொலியேவ்றா கனடாவின் அனைத்து மாகாணங்களையும் இணைக்கும் வல்லமை கொண்டவராக விளங்குகின்றார்’’
Share
மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியின் கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளராக வருவதற்காக மக்கள் ஆதரவை நாடும் திரு தீபக் தெல்ரெஜா கூறுகின்றார்.
‘’எமது கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொலியேவ்றா
கனடாவின் அனைத்து மாகாணங்களையும் இணைக்கும் வல்லமை கொண்டவராக விளங்குகின்றார்’’
இவ்வாறு மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியின் கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளராக வருவதற்காக மக்கள் ஆதரவை நாடும் திரு தீபக் தெல்ரெஜா கூறுகின்றார். தற்போது தனக்கான ஆதரவை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான திட்டத்தின்படி பணியாற்றிக்கொண்டிருக்கும் அவரிடம் நாம் முன்வைத்த கேள்விகளும் பதிகளும் கீழே காணப்படுகின்றன.
கேள்வி: மார்க்கம் தோர்ன்ஹில் தொகுதி வேட்பாளராக கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வகையில் முயன்று கொண்டிருக்கும் தங்களுக்கு எப்போது, எவ்வளவு அரசியல் ஆர்வம் ஏற்பட்டது?
பதில் : மார்க்கம் தோண்ஹில் தொகுதி ஒரு தனித்துவமான தொகுதி. இந்தத் தொகுதியில் வாழ்பவர்களுடைய தேவைகள் மிக அவசரமாக பூர்த்தி செய்யப்பட வேண்டியவை. அவைகளை நான் முதன்மையாகக் கவனிப்பேன்.
மார்க்கம் தோண்ஹில் தொகுதி மக்களுக்கு,சேவை புரிய. ஒரு பரந்த பார்வையுடன் எல்லா சமூகங்களுக்கும் நீதியான முறையில் செயல்படுவேன். நான் இத்தொகுதியில் உள்ள எல்லா சமூகங்களுடனும் நெருக்கமாக இணைந்து வேலை செய்கின்றேன். இதன் மூலம் மேற்படி சமூகங்களின் ஆதரவையும் பெற்றிருக்கின்றேன்.
கேள்வி : கொன்சர்வேர்ட்டிவ் கட்சி மூலம்தான் கனடியர்களது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்று நினைக்கின்றீர்களா? அப்படியானால் எவ்வாறு?
பதில்
1 , தேவையற்ற வரிகளை அகற்றுவது
2, புதிய வீடுகளைக் கட்டுவது,
3, குற்றச்செயல்களைத் தடுப்பது,
4, வரவு செலவுத் திட்டத்தை சமன்படுத்துவது.
நான்கு தூண்கள் போன்ற முக்கியமான இந்த முன்னெடுப்புகள் தான் கனடிய கொண்சர்வேட்டிவ் கட்சியின் முதன்மையான செயல்பாடாக இருக்கப் போகிறது.
மற்றும்,
● எமது கடன்களைக் கட்டுவதற்கு கூடுதலான வரிகள் வசூலிக்க வேண்டும் என்பது தேவையற்ற ஒன்று
● வியாபாரங்களுக்கு வரியை குறைப்பதன் மூலம் வேலை வாய்ப்புகள் கூட்டப்படும். அத்துடன் மேலதிக வருமானமும் ஈட்டப்படும்.
● குற்றம் புரிவோர் சிறையில் வைக்கப்பட வேண்டும். அவர்கள் இலகுவில் பிணையில் விடுபடக்கூடாது. எமது அணுகுமுறை மூலம் பணவீக்கத்தை குறைப்போம். கூடுதலான வீடுகள் மாநகரங்களுடன் இணைந்து கட்டப்படும்.
● அத்துடன் கரியமில வாயுவை வளிமண்டலத்திற்கு அனுப்பி, அதனால் ஏற்படும் சூழற் பாதிப்புக்களை குறைப்பதற்கு அணு கதிரியக்க தொழில்நுட்பத்தையும், சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தையும் ஆதரிப்போம்.
கேள்வி : தமிழ் மக்களது தாயக அரசியல் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். இங்குள்ள தமிழ் பேசும் அன்பர்களுக்காக தாங்கள் என்ன செய்தியை அவர்களுக்குக் கூற விரும்புகிறீர்கள்?
பதில் : தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். எமது கட்சியின் தலைவர் பியர் பொலியேவ்ற , ஈழத் தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்றும் இது சர்வதேச நீதிமன்றத்தில் (ICI) விசாரிக்கப்பட வேண்டும் என்றும் தெளிவாக கூறியிருக்கின்றார்.
ஒரு நாட்டில் வசிக்கும் மக்களுக்கு பேச்சு சுதந்திரம் இல்லாவிடில் அங்கு தனி மனித சுதந்திரமும் இல்லாது போய் விடும். ஆறாம் சட்ட திருத்தம் (ஆவணி 8,1983) தமிழ் மக்கள் தமது பெரு விருப்பமான சுதந்திர நாட்டை பற்றிப் பேசக்கூட முடியாத நிலைக்கு ஈழத் தமிழ் மக்களைத் தள்ளி உள்ளது. ஆறாம் சட்ட திருத்தமும் ( 6th amendment to the constitution ) பயங்கரவாத தடைச் சட்டமும் ஈழத் தமிழர்களை ஒரு பயம் கொள்ளும் நிலையில் கடந்த 40 வருடங்களாக வைத்துள்ளது.என்றால் அது பொய்யான கருத்தாக மாட்டாது.
கேள்வி : கனடாவின் அரச நிதியானது பெருமளவு பல்வேறு வழிகளில் வீணடிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுதுகின்றனவே அது பற்றி…..
பதில்: தனது ஒவ்வொரு ஊழல் செயலையும் தற்போதைய லிபறல் அரசாங்கம் மூடி மறைத்து வருகிறது.
SNE – Lavalin ஊழல்
WE chanty ஊழல்
Arrivecan ( Arrivescam ) ஊழல்
இப்படியான ஊழல்கள் லிபரல் அரசாங்கத்தின் பெரும் ஊழல்களுக்கு சில உதாரணங்களாக கூறலாம்.
மக்களின் பெரும் நிதிகள் சில தனிப்பட்டவர்கள் செல்வந்தர் ஆகும் செயல்பாடுகளை, லிபரல் அரசாங்கத்தின் திறமையற்ற செயற்பாடுகள் காட்டி நிற்கின்றன.
எமது கன்சர்வேட்டிவ் கட்சியின் நிலைப்பாடு:என்னவென்றால்
நாம் புதிதாக செலவு செய்யும் ஒவ்வொரு டொலருக்கும் ஒரு டொலர் வேற எங்காவது சேமிக்கப்பட வேண்டும்.. இந்த விடயத்தில் எமது தலைவர் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நாளில் இருந்தே திட்டமிட்டுச் செய்வார் என்பது எமது நம்பிக்கை
கேள்வி : தங்களது கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் அவர்களின் எதிர்க்கட்சித் தலைவராக பாராளுமன்றத்தில் பணியாற்றிய காலம் பற்றி தங்களது கருத்து என்ன?
எமது கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொலியேவ்றா பாராளுமன்றத்தில எதிர்கட்சித் தவைராகப் பொறுப்பேற்று இன்றுவரை ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. இந்த் காலப்பகுதியில் நான் அவரிடத்தில் பல சிறப்பான குணாதிசியங்களைக் கண்டிருக்கின்றேன்.
எமது கட்சிக்குள் ஒத்த சி;ந்தனை இல்லாத அங்கத்தவர்களை புரிந்துணர்வோடு இணைக்க கூடிய சிறந்த ஆற்றல் கொண்டவர். அதனை விட கனடாவின் எல்லா மாகாணங்களையும் இணைக்கும் வல்லமை கொண்டவராகவும் விளங்குகின்றார்.
எமது கட்சித் தலைவருடைய தூர நோக்கு சிந்தனையும். தெளிவான திட்டமிடலும். அவர் கனடிய பிரதமராக பொறுப்பேற்கும் போது மக்களின் வாழ்க்கை தரத்தை மீண்டும் உயர்நிலைக்கு கொண்டு வருவார் என்பதை நான் உறுதியுடன் கூறுவேன்.
இவ்வாறு திரு தீபக் தனது கேள்வி பதில் அடிப்படையில் தெரிவித்துள்ளார்.