சிறப்பாக இடம் பெற்ற பருத்தித்துறை நகர சபையின் உள்ளூராட்சி வார வாசிப்பு மாத பரிசளிப்பு விழா!
Share
பு.கஜிந்தன்
சிறப்பாக இடம் பெற்ற பருத்தித்துறை நகர சபையின் உள்ளூராட்சி வார வாசிப்பு மாத பரிசளிப்பு விழா!
பருத்தித்துறை நகர சபையின் உள்ளூராட்சி வார வாசிப்பு மாத பரிசளிப்பு விழா பருத்தித்துறை நகர சபை செயலாளர் தாரணி கஜரூபன் தலமையில் காலை 9:30 மணியளவில் ஆரம்பமானது.
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வீதியிலிருந்து விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு அங்கு மங்கல விளக்கேற்றல் இடம் பெற்றது. மங்கல சுடர்களினை நிகழ்வில் பிரதம விருந்தினரும் பருத்தித்துறை பிரதேச செயலருமான சி.சத்தியசீலன், வடமராட்சி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் மோ.தெய்வேந்திரா, முன்ளாள் நகர பிதாக்களான திரு. இருதயராசா, வே.நவரட்ணராசா, மற்றும் விருந்தினர்கள் ஏற்றிவைத்தனர்.
தொடர்ந்து தமிழ் மொழி வாழ்த்து இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து வரவேற்பு நடனம், வரவேற்பு உரை, தலமை உரை என்பன இடம் பெற்றதை தொடர்ந்து வடமராட்சியின் புகழ் பூத்த கராத்தே பட்டி 8 பெற்ற ஆசிரியரும், யோகாசன ஆசிரியருமான பெருமதிப்பிற்குரிய ரட்ணசோதி அவர்கள், மற்றும் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், ஒழுங்காக சபைக்கு வரி செலுத்துவோர்கள், பருத்தித்துறை நகர சபையால் நடாத்தப்பட்ட போட்டிகளில் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு நிகழ்வின் பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர்கள், கௌரவ விருந்தினர்கள் வழங்கி கௌரவித்ததுடன் சிறப்பு உரைகளையும் நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் பருத்தித்துறை நகரசபை உத்தியோகத்தர்கள், நகரசபைக்கு சிறப்பாக வரி செலுத்துவோர்கள், முன்னாள் சபை உறுப்பினர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள், சனசமூக நிலைய உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.