LOADING

Type to search

கனடா சமூகம்

‘தேசம்’ கனடிய மாத பத்திரிகையின் முதலாவது இதழின் பிரதிகளை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட கனடா வாழ் அரசியல் பிரமுகர்கள், வர்த்தக அன்பர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள்

Share

கடந்த மார்ச் மாதத்தின் இறுதி வாரத்தில் வெளியான ‘தேசம்’ என்னும் கனடிய மாத பத்திரிகையின் முதலாவது இதழின் பிரதிகளை கனடா வாழ் அரசியல் பிரமுகர்கள், வர்த்தக அன்பர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.
ரொறன்ரோ மற்றும் மொன்றியால் நகரங்களில் மேற்படி பிரதிகளை தேசம் வெளியீட்டு நிறுவனத்தின் விநியோக மற்றும் சந்தைப்படுத்தும் முகாமையாளர் ராம்சங்கர் சிவநாதன் பலருக்கு வழங்கினார்.

இந்த பிரதிகள் வழங்கல் வைபவம் கனடாவின் ஒன்றாரியோ மாகாண பாராளுமன்றம் வரையில் விரிவடைந்து சென்றது மகிழ்ச்சியையும் பெருமையையும் தந்த விடயமாக இருந்தது.
இவ்வாறான பெருமையைப் அடைய காரணமாக அமைந்தவர் ஒன்றாரியோ மாகாண அரசின் மார்க்கம் – தோர்ண்ஹில் தொகுதியின் உறுப்பினரும் முக்கிய இரண்டு அமைச்சுக்களின் பாராளுமன்றச் செயலாளருமான லோகன் கணபதி அவர்களே ஆவார்.

அவரது அயரான முயற்சியினால் ஒன்றாரியோ மாகாண பிரஜா உரிமைகள் மற்றும் பல் கலாச்சார அமைச்சர் (Hon. Michael Ford, Minister of Citizenship and Multiculturalism அவர்களும் சக பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து ‘தேசம்’ பத்திரிகையின் பிரதிகளைப் பெற்றுக்கொண்டார்.

மேலும் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்களது உத்தியோகத்தர்களுக்கும் ‘தேசம்’ வெளியீட்டு நிறுவனத்தின் பிரதிநிதிகள் நன்றியைத் தெரிவித்தனர்.

ஒன்றாரியோ மாகாப் பாராளுமன்றத்தின் அமர்வுகளுக்கும் அழைக்கப்பட்டிருந்த ‘தேசம்’ மாதப் பத்திரிகையின் பிரதிநிதிகள் அங்கு லோகன் கணபதி அவர்களால் வரவேற்கப்பட்டனர். அத்துடன் மற்றுமொரு மாகாணப் பாராளுமன்ற உறுப்பினரான அரிஸ் பாபிகின் மற்றும் அமைச்சர் றேமன் சோ அவர்களும் தேசம் பிரதிகளைப் பெற்றுக்கொண்டு பாராளுமன்ற அமர்வுகளின்போதும் தமது பாராட்டுக்களை ‘தேசம்’ பத்திரிகையின் பிரதிநிதிகளுக்கு கனடா வாழ் அரசியல் பிரமுகர்கள், வர்த்தக அன்பர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் மகிழ்ச்சியுடன் நன்றியைத் தெரிவித்தனர்.