பண்பாடுகளின் அடிப்படையை மாற்ற நினைக்காதீர்கள் : நினைத்தால் எமது இனம் அழிந்துவிடும் என்கிறார் செஞ்சொற்செல்வர் இரா செல்வவடிவேல்
Share
பு.கஜிந்தன்
பண்பாடுகள் நமக்குரியவை. அந்த அடிப்படையை மாற்ற நினைக்காதீர்கள், அவ்வாறு மாற்ற நினைத்தால் எமது இனம் அழிந்துவிடும் என செஞ்சொற்செல்வர் செல்வவடிவேல் தெரிவித்துள்ளார்.
சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்ற சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வில் கலந்து கொண்டு மகாபாரத தொடர் சொற்பொழிவை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, மாற்றங்கள் உண்மைதான், ஆனால் பண்பாடுகள் நமக்கு உரியவை, அவற்றை மாற்ற நினைத்தால் நமது இனம் அழிந்துவிடும், எமது பண்பாட்டை காப்பாற்ற பெண்களால் தான் முடியும் என்றார்.
குறித்த சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு இன்று காலை 10:45 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலமையில் இடம் பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக பஞ்ச புராணம் ஓதப்பட்டதை தொடர்ந்து மகாபாரத தொடர் சொற்பொழிவை ஓய்வு பெற்ற ஆசிரியர் செஞ்சொற் செல்வர் இரா.செல்வவடிவேல் நிகழ்த்தினார். இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.