கனடா வாழ் ஈழத்துக் கலைஞர் ரஜீவ் சுப்பிரமணியத்தின் தயாரிப்பில் தமிழகத்தில் வரவேற்புக்களைப் பெற்று திரையிடப்பட்டுள்ள Finder திரைப்படம்
Share
ஈழத்தமிழர்களுக்கு பெருமைமிகு அறிமுகமாய் கனடா வாழ் ஈழத்துக் கலைஞர் ரஜீவ் சுப்பிரமணியத்தின் தயாரிப்பில் தமிழகத்தில் வரவேற்புக்களைப் பெற்று திரையிடப்பட்டுள்ள Finder திரைப்படம் தற்போது இரண்டாவது வாரத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது.
தென்னிந்தியாவில் கனடா ‘ஆரபி படைப்பகம்’ சார்பில் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் தயாரிப்பில் உருவாகி தற்போது தமிழ் நாட்டின் திரையரங்குகளில் Finder திரைப்படத்தின் இயக்குனர் வினோத் ஆவார். இவர் ஏற்கனவே பல திரைப்படங்களின் இணை இயக்குனராக பணியாற்றிவுள்ளார்.
நம்மவர்களுக்கான களம் என்னும் தொனியில் எமது கனடா வாழ் கலைஞரும் தயாரிப்பாளருமாகிய ரஜீவ் சுப்பிரமணியத்தின் சிந்தனையின் நிமித்தம் பல ஈழத்துக் கலைஞர்களுக்கும் இந்த படத்தில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதையும் குறிப்பிடத்தக்கது. கவிப்பேரரசு அவர்கள் நீண்ட நாட்களுக்கு பின்னர் நான்கு முத்தான பாடல்களை எழுதியுள்ளார் என்பதும் ஈழத்தில் இசைத் துறைக்குள் வலம் வரும் வெற்றி சிந்துஜன் என்னும் இளைய இசைக் கவிஞரை தென்னிந்திய திரைத்துறைக்குள் இந்த திரைப்படம் அறிமுகப்படுத்தியிருப்பதில் நாம் பேருவகையும் பெருமையும் கொள்கின்றோம் .
Finder திரைப்படம் தொடர்ந்து பல வெற்றிகளை ஈட்டி சாதனைகள் படைக்க வேண்டும் என கனடா உதயன் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது