LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் எழுதிய ‘மகா வம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும்’ நூல் வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தரிடம் கையளிப்பு.

Share

(மன்னார் நிருபர்)

(01-05-2024)

மன்னார் ரோட்டரி கழகத்தின் நிதி அனுசரணையில் மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் எழுதிய ‘மகா வம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும்’ எனும் இலக்கிய நூல்கள் மூலமாக இடப்பெயர் வரலாற்று ஆய்வு நூல் வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன் அவர்களிடம் வவுனியா பல்கலைக்கழகத்தில் மன்னார் ரோட்டரி கழகத்தின் செயலாளர் தி.தனேஸ்வரன் மற்றும் நூலாசிரியர் எஸ் .ஜெகன் ஆகியோர் இணைந்து 30-04-2024 செவ்வாய்க்கிழமை மாலை கையளித்துள்ளனர். .

இந்த நூலானது மகாவம்ச விஜயனும் 700 தோழர்களும் இலங்கையில் வந்து இறங்கிய இடமானது மன்னார் கட்டுக்கரை பிரதேசம் என்பதை சங்ககால இலக்கிய நூல் களான கம்பராமாயணம், தொல்காப்பியம்,சிலப்பதிகாரம் உட்பட மகாவம்சம் போன்ற நூல்களின் ஆதாரத் தோடும் தற்கால வரலாற்றாசிரியர்கள் வெளியீடு செய்த நூல்களின் துணையோடு கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த கட்டுக்கரை பிரதேசத்தின் தோற்றம் ,வளர்ச்சி அதன் சிறப்பு குன்றுவதற்கான காரணங்களையும் கம்பராமாயணம், மகாவம்சம் உட்பட சங்ககால இலக்கிய நூல்கள் கூறும் இடப் பெயர்களையும் தற்போது மன்னார் மாவட்டத்தில் காணப்படும் இடம் பெயர்களையும் ஒப்பிட்டு ஆய்வு நூலாக வெளிவந்துள்ளது.

இந்த நூலானது கடந்த 23 திகதி மன்னார் மாவட்டச் செயலாளர் முன்னிலையில் உத்தியோக பூர்வமாக வெளியீடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் பாடசாலை மாணவர்களுக்கும் ,பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ,கல்வியாளர்களுக்கும் இந்த நூல் கிடைக்க வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரும் இந்த நூலை மென்மேலும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனும் நோக்கில் முதற் கட்டமாக வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நூல் தொடர்பாக வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் மங்களேஸ்வரன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,,

ஊடகவியலாளர் ஜெகன் அவர்களால் எழுதப்பட்ட மகாவம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும் என்னும் நூல் வெளியீட்டில் என்னால் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. இருந்தும் இந்த நூலினை ஊடகவியலாளர் ஜெகன், மன்னார் ரோட்டரி கழக செயலாளர் தனேஸ் அவர்களும் நேரில் வந்து கை அளித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த நூலானது சங்க இலக்கிய நூல்கள் மூலம் இடப்பெயர் ஆய்வின் ஊடாக இந்த புத்தகத்தை வெளியிட்டு இருப்பது உண்மையில் சிறந்த விடயமாகும். ஏனெனில் இந்த மாதிரியான நூல்கள் தான் எமது மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள், அவர்களது பிரதேசங்கள், அவர்களது வாழ்க்கை வரலாறுகள் போன்றவற்றை சிறப்பாக சொல்லுகின்றது.

சில வரலாற்று புத்தகங்கள் வரலாற்றை திரிபு படுத்துகின்றதாகவோ அல்லது வரலாற்றை மாற்றுவதாக இருக்கின்ற காலத்தில் உண்மையான வரலாற்றை கொண்டு வருவதற்கு இந்த நூலை ஜெகன் எழுதியிருப்பது உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விடயம். உண்மையில் அவருக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். இதில் மன்னார் ரோட்டரி கழகமானது இந்த புத்தகத்திற்கு வெளியீட்டு அனுசரணையை வழங்கியிருப்பது உண்மையில் சிறந்த விடயம் .

குறிப்பாக ரோட்டரி கழகமானது ஒவ்வொரு மாவட்டங்களிலும் செய்கின்றது நான் பார்த்த அளவுக்கு. மன்னார் மாவட்டத்தில் இவ்வாறு ஒரு நூலை வெளியிடுவதற்கு அவர்கள் தங்களது அனுசரணையை வழங்கியிருப்பது என்பது மிகச் சிறந்த விடயம். ஏனெனில் தற்போதைய கால கட்டத்தில் இவ்வாறான அமைப்புக்கள் கூடுதலாக வாழ்வாதார உதவிகள் அல்லது மக்கள் வாழ்வதற்கு உதவிகள் மட்டும் செய்கின்றன.

மன்னார் ரோட்டரி கழகம் அவற்றை மட்டுமின்றி இவ்வாறான புத்தகங்களை வெளியிடுவதற்கு உதவி செய்வது என்பது ஒரு சிறந்த விடயம்.

இந்த ரோட்டரி கழகமானது நூலை வெளியீடு செய்வதற்கு உதவி செய்வதன் ஊடாக எமது வரலாற்றை எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்வதற்கு உதவும் .

நிச்சியமாக இந்த நூலினை எமது பல்கலைக்கழகத்தில் வன்னி நுலாசிரியர்களால் வெளியிடப்படுகின்ற நூல்கள் அனைத்தும் நாங்கள் நூல் களஞ்சியமாக சேர்த்து வைத்திருக்கின்றோம்.

எமது பல்கலைக் கழகத்தில் புதிய நூலகத்தில் இவற்றிற்காக விஷேடமாக ஒதுக்கப்பட்ட இடத்தில் இந்த நூல்கள் சேர்க்கப்படுகின்றது.

நிச்சயமாக இந்த நூல் வவுனியா பல்கலை கழகத்தில் ஆவணப் படுத்தப்படும். மேலும் இந்த ரோட்டரி கழகமானது தொடர்ச்சியாக இவ்வாறான அனுசரணைகள் வழங்குவது மன்னார் மாவட்டத்துக்கும் இந்த பிரதேசத்துக்கும் நிச்சயமாக உதவி செய்யும் என்று கூறிக் கொண்டு ஊடகவியலாளர் ஜெகன் என்பவர் ஊடகத்துறையில் இருந்து கொண்டு இவ்வாறு வரலாற்று ஆவணங்களை வெளியிடுவது என்பது உண்மையில் ஒரு சிறந்த விடயம்.

ஒரு வரலாற்று நூலை எழுதுவது என்பது இந்த காலத்தில் இலகுவான காரியமில்லை. பல்வேறுபட்ட சவால்கள் பல்வேறுபட்ட முன்னைய காலங்களில் வெளியீடு செய்யப்பட்ட ஊசாத்துணை நூல்களை படித்து ஆதாரமாக கொண்டு வந்து இந்த நூலை வெளியீடு செய்திருப்பது உண்மையில் சிறந்த விடயமாக கருதப்படுகிறது.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்ற ரீதியில் ஊடகவியலாளர் ஜெகன் அவர்களுக்கும் இங்கு வருகை தந்து இந்த நூலினை எமக்கு தந்த மன்னார் ரோட்டரி கழக செயலாளர் தி.தனேஸ்வரன் அவர்களுக்கும் எமது நன்றிகள் என தெரிவித்தார்.