LOADING

Type to search

இலங்கை அரசியல்

டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்டார் ’போதைப் பொருட்கள் கடத்தல் மன்னன்’ மன்னா ரமேஷ்

Share

இன்டர்போல் பொலிசாரால் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு தேடப்பட்டு வந்த மன்னா ரமேஷ் டுபாயில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்று வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவனாகக் கருதப்படும் ‘மன்னா ரமேஷ்’ எனப்படும் ரமேஷ் பிரியஜனக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவொன்று சந்தேக நபரை 07-05-2024 அன்று காலை டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

சர்வதேச பொலிஸாரால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த மன்னா ரமேஷ் அண்மையில் டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கொலை, போதைப்பொருள் கடத்தல், கப்பம் பெறுதல் உள்ளிட்ட பல குற்றங்கள் மன்னா ரமேஷ் மீது சுமத்தப்பட்டுள்ளது.

அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர்களிடம் கப்பம் பெறும் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அண்மைக்காலமாக சில கொலைகள் இவரின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்