வாழைச்சேனை ஜெயந்தியாலை பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையே மோதல் இருவர் படுகாயம் – பதற்றத்தையடுத்து விசேட அதிரடிப்படை பலத்த பாதுகாப்பு
Share
(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள புனானை ஜெயந்தியாலை பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையே நேற்று சனிக்கிழமை (11) மாலை ஏற்பட்ட மோதில் இருவர் பலத்த காயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இதனையடுத்து அந்த பகுதியி ஏற்பட்டுள்ள பதற்றத்தையடுத்து அங்கு விசேட அதிரடிப்படையினர் பொலிசார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதுபற்றி தெரியவருவதாவது
குறித்த பகுதியைச்; சேர்ந்த இருவர் சம்பவதினமான நேற்று மாலை முச்சக்கர வண்டியில் பிரயாணித்தனர் இதன் போது அங்கு மோட்டர் சைக்கிளில் பிரயாணித்த 23 வயது இளைஞன் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து இளைஞன் மீது தாக்குதலையடுத்து இளைஞன் அங்கிருந்து தப்பி ஓடி அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் புகுந்து கொண்டான்.
இதனையடுத்து அந்த இளைஞனை வெளியேவருமாறு முச்சக்கரவண்டியில் சென்ற இருவரும் ஹோட்டல் மீது தாக்குதல் நடாத்தியதையடுத்து அங்கிருந்த கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்த நிலையில் வெளியே வந்த இளைஞனுக்கும் அந்த இருவருக்கும் இடையே மோதல் எற்பட்டதையடுத்து இளைஞனின் தாக்குதலிவல் அந்த இருவரும் படுகாயமடைந்ததையடுத்து அங்கிருந்து இளைஞன் தப்பி ஓடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். .
இதில் படுகாயமடைந்த 47, 45 வயதுடைய இருவரையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன் இன முறுகல் ஏற்படும் நிலை ஏற்பதை தடுப்பதற்காக உடனடியாக விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசார் வரவழைக்கப்பட்டு பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பெரிசார் மேற்கொண்டுவருகின்றனர்.