LOADING

Type to search

இலங்கை அரசியல்

பருத்தித்துறை – துன்னாலையில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத கொலைக்களம் முற்றுகை

Share

பருத்தித்துறை – துன்னாலைப் பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத கொல்களத்தை முற்றுகையிட்ட சாவகச்சேரிப் பொலிஸார் இறைச்சியாக்கப்படவிருந்த கன்றுத்தாச்சி மாடு உட்பட மூன்று பசு மாடுகளை 11/06 செவ்வாய்க்கிழமை காலை வேளையில் உயிருடன் மீட்டுள்ளனர்.

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுவில் பிரதேசத்தில் அண்மையில் வளர்ப்பு மாடுகள் திருடப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீண்ட தேடுதலுக்கு மத்தியில் பொலிஸார் மேற்படி சட்டவிரோத கொல்களத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இதன்போது சாவகச்சேரி- மட்டுவில் கிராமத்தில் திருடப்பட்ட ஒரு மாட்டினை பொலிஸார் மீட்டதுடன்-ஏனைய இரண்டு மாடுகள் அடையாளம் காணப்படாத நிலையில் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் வைத்து பராமராக்கப்பட்டு வருகின்றது. அதேவேளையில் மட்டுவில் கிராமத்தில் திருடப்பட்ட ஏனைய மாடுகள் இறைச்சியாக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சுற்றிவளைப்பின் போது மூன்று பசு மாடுகள் மீட்கப்பட்டதுடன் பசு மாடுகளை கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனம் ஒன்றுடன் பிரதான சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.