LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி-இலங்கைத் தமிழரசுக் கட்சி சந்திப்ல் பேசப்பட்டது என்ன?

Share

இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி குழுவினர், மாவை சேனாதிராஜா தலைமையிலான தமிழ் அரசுக் கட்சியினரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

யாழ். மார்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் 13-06-2024
மதியம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதித் தேர்தல் உட்பட பல சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இந்தச் சந்திப்பில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராஜா, சிரேஷ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், நிர்வாகச் செயலாளர் எஸ்.எக்ஸ். குலநாயகம், ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

தேசிய மக்கள் சக்தி சார்பில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிமல் ரத்நாயக்கா, இராமலிங்கம் சந்திரசேகர் உட்படப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி குழுவினர் நேற்று தமிழ் அரசுக் கட்சியினரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்த நிலையிலேயே இன்று தேசிய மக்கள் சக்தியினரும் தமிழ் அரசுக் கட்சியினரைச் சந்தித்துள்ளமை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.