“சமஸ்டி அரசியல் யாப்பை கொண்டுவர முடியுமா?” ரணிலிடம் செல்வராசா கஜேந்திரன் கேள்வி
Share
நடராசா லோகதயாளன்
ஒற்றையாட்சியை ஒழித்து சமஸ்டி அரசியல் யாப்பை கொண்டு வர முடியுமா என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றில் 18-06-2024 தினம் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
நாடாளுமன்ற உறுப்பினர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஜனாதிபதி நாடாளுமன்றம் வருகை தந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல முயற்சிகளை மேற்கொள்வதாக அவர் கூறி வருகின்ற நிலையிலே இந்த நாட்டினை பொருளாதார அழிவில் இருந்து மீட்டெடுப்பதற்கு செய்யப்பட வேண்டிய மிகப் பிரதானமான ஒரு கடமை இருக்கின்றது என்பதனை நான் ஜனாதிபதியின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.
75 வருடங்களாக இனங்களிற்கு இடையிலே இருந்த உறவை சீர் குலைத்து துருவமயப்படுத்தப்பட்டுள்ள ஒற்றையாட்சி முறைமையான அரசியலமைப்பு, இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தை வங்குறோத்து நிலைக்கு கொண்டு வந்துள்ள ஒற்றையாட்சி முறைமையான அரசியலமைப்பு, இந்த நாட்டினுடைய உச்ச நீதிமன்றம் உட்பட சகல நீதிமன்றங்களையும் முடமாக்கியிருக்கின்ற ஒற்றையாட்சி முறைமையான அரசியலமைப்பு ஒழிக்கப்பட்டு சகல இனங்களும் தமிழ்த் தேசமும், சிங்கள தேசமும் இந்த நாட்டின் முன்னேற்றத்தில் பங்கேற்கக்கூடிய ஒரு சமஸ்டி அரசியலமைப்பு கொண்டு வரப்படுவதன் மூலம் மட்டும்தான் அந்த முன்னேற்றத்தை நிரந்தரமாக ஏற்படுத்த முடியும்.
அவ்வாறான முயற்சியை செய்வதற்கு ஜனாதிபதி தன்னுடைய காலத்தில் இந்த ஒற்றையாட்சி முறையின் தோல்வியை ஒப்புக்கொண்டு ததிழ்த் தேசமும், சிங்கள தேசமும் அங்கீகரிக்கப்பட்ட அடப்படையிலான சமஸ்டி அடிப்படையிலான தீர்வை கொண்டு வரவதற்கும் அதன் மூலம் தமிழ் மக்கள் இந்த நாட்டினுடைய அபவிருத்தியிலும், நான்டின் முன்னேற்றத்திலும் வல்லரசுத் தரத்திற்கு இந்த தேசத்தை கொண்டு வருவதற்கான பங்களிப்பை செய்ய சமஸடி அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதனை செய்ய ஜனாதிபதி தயாரா இருக்கின்றாரா என நான் அவரிடம் கேட்க விரும்புகின்றேன் என்றார்.