LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு

Share

இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு 07-07-2024 அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. – அரசாங்ம், ஆசிரியர் மீதான அடாவடி மற்றும் அசமந்த போக்கு தொடர்பில் இதன் போது கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. தற்போதைய காலத்தில் அரசாங்கம், ஆசிரியர் மீது பல்வேறுபட்ட வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இலங்கையில் தற்சமயம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு இந்த அரசாங்கம் பணம் இல்லை என்று கூறும் அதே நிலையில் மறுபுறம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வரி இல்லாத வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரங்கள் வழங்கி உள்ளது.

அரசாங்கம், பூநகரி பிரதேசம் மற்றும் வவுனியா பிரதேசத்தில் புதிய மதுபான சாலைகளை திறப்பதற்கு அனுமதி பத்திரம் வழங்கியுள்ளது. இதன் மூலம் அரசாங்கம் பொருளாதாரத்தை ஈடு செய்வார்கள் என்றால் இல்லை. நாட்டில் அபிவிருத்தி என்பது மிகவும் கீழ்நிலை நோக்கி செல்கின்றது. இவ்வாறு தெரிவித்தார் இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் புயல்நேசன். யாழ்ப்பாணத்தில் இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் காரியாலயத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்பொழுது அரசாங்கத்தின் இயலாமை தன்மையை ஆசிரியர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. எங்கள் போராட்டம் தொடரும். அரசாங்கம் , ஆசிரியர்கள் மீது கை வைக்குனால், வகுத்தன போராட்டங்கள் இலங்கை இரீதியில் இடம்பெறும். அதனை இந்த அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாமல் போகும்.

பாடசாலைகள் முடக்கப்படும். இந்த நாட்டில் அரசியல்வாதிகள் வைத்தியர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உட்பட அனைத்து துறைகளில் உள்ளவர்களையும் ஆளாக்கியது ஆசிரியர்களே. I ஆசிரியர்கள் மீது கை வைக்க வேண்டாம் என்று நாங்கள் அரசாங்கத்திற்குக் கூறுகின்றோம். எங்கள் போராட்டங்கள் நியாயமானது. போராடும் எங்களை முடக்க நினைக்க வேண்டாம். அத்துடன் வினை திறன் தடை தாண்டல் பரீட்சை, பதவி உயர்வு தொடர்பிலும் ஆசிரியர்கள் பல்வேறு இடர்களை எதிர்கொண்டு வருகின்றனர். 3,1 ஆசிரியர் 2,2 ஆசிரியர் 2,1 ஆசிரியர் இவர்கள் அனைவரும் தங்களுடைய பதவி நிலைகளை அடுத்தடுத்து கொண்டு செல்வதில் பல்வேறு இடங்களை எதிர்கொண்டு வருகின்றனர். சிலருக்கு மூன்று வருடங்கள் என்ற அடிப்படையிலும் சில பேருக்கு நான்கு வருடங்கள் என்று அடிப்படையிலும் காணப்படுகின்றது.

சில இடங்களில் மூன்று வருடங்கள் முடித்தவர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது, சில இடங்களில் மூன்று வருடங்களுக்கு குறைவாக, முடிக்காதவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அதேபோல் வழிகாமம் கல்வி வளையத்தில் 54 மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புற்று நோய் உட்பட பல்வேறு நோய்த்தாக்கங்களுக்கு உள்ளானவர்களும் உள்ளடங்கப்பட்டுள்ளனர். உண்மையில் ஆசிரியர்களுக்கு வினைத்திறன் தடை தாண்டல் பரீட்சை தேவை. இந்த ஆசிரியர்களுக்கு உரிய காலப்பகுதியில் பரீட்சை நடத்தப்படவில்லை என்றும் வலிகாமம் கல்வி வலயத்தில் அதிகளவான ஆசிரியர்கள் உள்ள காரணத்தால், அதேபோல் யாழ்ப்பாண கல்வி பிரிவில் அதிகளவான ஆசிரியர்கள் உள்ளமையாலும் ஆசிரியர் நிலையங்கள் வினைத்திறன் தடை தாண்டல்பரீட்சையை உரிய காலத்தில் நடத்தவில்லை. அதனை நடத்தாமல் விட்டது ஆசிரியர் மத்திய நிலையத்தைச் சார்ந்தது. ஆகவே ஆசிரியர்களின் பதவி உயர்வு இரண்டு வருடங்கள் அல்லது மூன்று வருடங்கள் பின்னோக்கி சென்றுள்ளது .