LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முஸ்லீம் மக்களின் வாழ்விடம் தொடர்பில் வடக்கு மாகாண அதிகாரிகள் கலந்துரையாடல்

Share

நடராசா லோகதயாளன்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முஸ்லீம் மக்களின் வாழ்விடப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

கைதடியில் உள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதின், மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர், மாநகர சபை, பல்கலைக் கழக பொறியியல்பீடத்தினர் உடபட பல திணைக்களத்தினரும் கலந்துகொண்டனர்.

இதன்போது மீளக.குடியமர்ந்து நிரந்தர வீடு அற்ற முஸ்லீம் மக்களிற்கு ஓர் தொடர் மாடி வீடு அமைத்து கொடுப்பது தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்காக பொம்மைவெளிப் பகுதியில் முஸ்லீம்களால் கொள்வனவு செய்யப்பட்ட 70 பரப்புக் காணியில் அமைப்பது தொடர்பிலேயே ஆராயப்பட்டது.

இப்பகுதியில் காணப்பட்ட பள்ளம் 15 ஆண்டுகளிற்கு முன்பு மாநகர சபையால் குப்பை கொட்டியி நிரவியது அதனால் அப் பகுதியில் கட்டிடம் அமைக்கும் தன்மை காணப்படுகின்றதா என யாழ்ப்பாணம் பல்கலைக் கழக பொறியியலப் பீடம் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் இதேநேரம் அப் பிரதேத்தில் உள்ளக வீதிகள் அமைப்பு மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் இந்த திட்டங்கள் 80 மில்லியன் ரூபாவில் முன்னெடுக்கப்பட திட்டமிடப்படுகின்றது.