LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஆட்சியில் உள்ள தவறுகளை திருத்த வேண்டும் என்ற நோக்கிலேயே ரணிலின் செயற்பாடுகள் உள்ளன.. தேர்தலை கண்டு அவர் பயப்படவில்லை என்கிறார் அமைச்சர் டக்ளஸ்

Share

பு.கஜிந்தன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தேர்தலை கண்டு பயப்படவில்லை என்று எனக்குத் தெரிகின்றது என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.

22-07-2024 அன்றையதினம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரச்சினைகள் குறித்து நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் “ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் 22 ஆவது திருத்தச் சட்டத்தை வர்த்தமானியில் பிரசுரித்து தேர்தலை பிற்போட முயற்சிக்கின்றார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன இதுகுறித்து தங்களது கருத்து என்ன” என வினவியவேளை அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அவரை நன்கு அறிந்து கொண்டவன் என்ற வகையில், அவர் தேர்தலை பார்த்து பயப்படுவது போல் எனக்கு தெரியவில்லை.

தவறு ஒன்று உள்ளது, அதனை திருத்த வேண்டும் என்ற நோக்கிலேயே அவரது செயற்பாடுகள் உள்ளன என நினைக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த ஊடகவியலாளர் ஒருவர் “ரணில் விக்கிரமசிங்கவே தவறுகள் பலவற்றை தமிழர்களுக்கு இழைத்தவராக இருக்கும் போது எவ்வாறு அவர் தவறுகளைத் திருத்துவார்’ என்று வினாவ, அதற்கு சிரித்தபடி நின்றார் அமைச்சர் டக்ளஸ்