LOADING

Type to search

கனடா அரசியல்

முனைவர் பட்டம் பெற்றவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் புதிய செயலாளராக பதவியேற்றுள்ள தமிழ் கல்வியாளருமான வாசுகி நகுலராஜாவை கௌரவிக்கும் இணைய வழி நிகழ்வு

Share

கனடாவில் தமிழ் மொழி மற்றும் கலை இலக்கியம் ஆகிய துறைகளில் நன்கு அறியப்பெற்றவரும் ஒன்றாரியோ அரசுப் பணியில் உயர் பதவியொன்றை வகிப்பவரும் தற்போது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழியில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் புதிய செயலாளராக பதவியேற்றுள்ள தமிழ் கல்வியாளருமான வாசுகி நகுலராஜாவை கௌரவிக்கும் இணைய வழி நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காலை கனடா நேரப்படி ஆரம்பமானது.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் ரவி கனகசபை அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த இணைய வழி பாராட்டு வைபவத்தில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், மற்றும் தமிழ் ஆர்வலர்கள் தமிழாசிரியைகள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் முன்னாள் தலைவர் அகணி சுரேஸ் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

அங்கு உரையாற்றிய அனைவரும் முனைவர் வாசுகி நகுலராஜா அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் ரிவிஐ தொலைக்காட்சியில் நடத்திய சிறுவர்களுக்கான தமிழ் மொழி தொடர்பான நிகழ்ச்சியின் பயன்பற்றியும் அவர் தொட ர்ச்சியாக கனடிய தமிழர் சமூகத்தின் பயன் கருதி அர்ப்பணிப்போடு ஆற்றி வரும் பணிகள் பற்றியும் உரையாற்றினார்கள்.

குறிப்பாக ரிவிஐ தொலைக்காட்சியில் முன்னர் பணியாற்றிய வி. என். மதியழகன் அவர்கள் வாசுகி நகுலராஜாவின் பன்முகப் புலமை பற்றியும் ரிவிஐயில் அவர் நடத்திய சிறுவர்களுக்கான மொழி சார்ந்த நிகழ்ச்சியின் வெற்றி பற்றியும் புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பலர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களில் பலர் திருமதி வாசுகி நகுலராஜாவின் துணைவர் நகுலராஜா அவர்கள் பற்றியும் அவர்கள் இருவரும் பெற்று வளர்த்து உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ள புதல்விகள் இருவர் ஆகியோர் பற்றிய சிறப்புக்களையும் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டனர்.

இறுதியில் திருமதி வாசுகி நகுலராஜா தனது பதிலுரையில்பல பயனுள்ள கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.