அனைவராலும் பாராட்டப்பெற்ற விழாவாக கனடாவில் நடைபெற்ற ‘வென்மேரி சர்வதேச விருதுகள்’ வழங்கும் விழா
Share
2022ம் ஆண்டு முதற் தடவையாக யாழ்ப்பாணத்திலும் 2023ம் ஆண்டு பிரான்ஸ் தேசத்திலும் 2024ம் ஆண்டு, அதாவது கடந்த 11-08-2024 அன்று ஞாயிற்றுக்கிழமையன்று கனடாவின் அஜக்ஸ்’ நகரிலும் நடத்தப்பெற்ற ‘வென்மேரி சர்வதேச விருதுகள் வழங்கும் விழா அனைவராலும் பாராட்டப்பெற்ற விழாவாக நடைபெற்றது.
மேலும் மிக அண்மையில் கனடாவில் நடைபெற்ற ஏனைய விழாக்களை விட அதிகளவு பேசப்பெறும் ஒரு வ ‘வென்மேரி சர்வதேச விருதுகள்’ வழங்கும் விழாவாகவும் தகுதிவாய்ந்த சாதனையாளர்கள் 19 பேர் உலகின் பல நாடுகளிலிருந்தும் அழைக்கப்பெற்று கௌரவிக்கப்பெற்ற விருது விழாவாகவும் இவ்வருடத்தின் விழா அமைந்தது என்றால் அது மிகையாகாது.
வென்மேரி சர்வதேச விருதுகள்’ வழங்கும் விழாக்குழுவின் நிறுவனர் அனுரா வென்சலாஸ் தலைமையில் அவர் சார்ந்து குடும்பங்கள் சார்ந்த அங்கத்தவர்கள் மற்றும் பலர்வெளிநாடுகளிலிருந்து கனடாவிற்கு வந்து இவ்வருட விருது விழாவைச் சிறப்பித்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
வென்மேரி சர்வதேச விருதுகள்’ வழங்கும் திட்டத்தின் தேர்வுக்குழுவிற்கு தலைவராக விளங்கும் முன்னாள் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறை விரிவுரையாளர் பேராசிரியர் சிவலிங்கராஜா யாழ்ப்பாணத்திலிருந்து கனடாவிற்கு வருகை தந்திருந்து அன்றையை விழாவின் தலைமையுரையை ஆற்றினார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மேற்படி விழாவின் சிறப்பு விருந்தினராக மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியின் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி கலந்து சிறப்பித்து வாழ்த்துரையும் வழங்கினார்.
சுமார் 500 பார்வையாளர்கள் கலந்து கொண்ட விருது விழாவின் சபையைப் பார்க்க அனைவரும் உற்சாகம் அடைந்ததாகவும் அங்கு உரையாற்றிய சிறப்பு விருந்தினர்கள் தங்கள் மன எண்ணத்தை எடுத்துரைத்தார்கள்.
விருது விழாவை தமிழில் ஜஸ்ரின் போல் அவர்களும் ஆங்கிலத்தில் யாழினி அவர்களும் தொகுத்து வழங்கினார்கள்.
இவ்வருடத்தின் ‘வென்மேரி சர்வதேச விருதுகள்’ வழங்கும் விழாவில் சாதனையாளர்களுக்கான விருதுகளைப் பெறுவதற்காக கனடாவிலிருந்து பலர் தெரிவு செய்யப்பெற்றிருந்தார்கள்
அவர்களின் பெயர்கள் பின்வருமாறு:- பேராசிரியர் நா. சுப்பிரமணியன் அவர்கள்- ‘இன்னிசை வேந்தர்’ பொன் சுந்தரலிங்கம் அவரம்கள்- பேராசிரியர்அ. ஜோசப் சந்திரகாந்தன் அவர்கள்- ஒலிபரப்பாளர் வி. என். மதியழகன் அவர்கள்- நடன ஆசிரியை சாந்தா பொன்னுத்துரை அவர்கள்- பேராசிரியர் நடேஸ் பழனியர் அவர்கள்- எழுத்தாளர் கந்தையா சண்முகலிங்கம் அவர்கள்- மற்றும் சிந்தனைப் பூக்கள் பத்மநாதன் அவர்கள்- ஆகியோரும் அடங்குவார்கள்.
மேலும் வெளிநாடுகளிலிருந்து தகமைபெற்ற பல வெற்றியாளர்களும் மேடையில் சிறப்பான முறையில் கௌரவிக்கப்பெற்றனர்.
கலை நிகழ்ச்சிகளும் அங்கு இடம்பெற்றன.
– சத்தியன்-