LOADING

Type to search

கனடா அரசியல்

மிசிசாகா நகரில் ‘தாமோர் நகைமாளிகை’ க்குள் புகுந்து கொள்ளையிட முயன்றவர்களை மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த உரிமையாளர்கள்

Share

தமிழர் நிர்வாகத்தில், மிசிசாகா நகரில் இயங்கிவரும் ‘தாமோர் நகைமாளிகை’ க்குள் புகுந்து கொள்ளையிட முயன்ற கொள்ளையர்களை மடக்கி பிடித்த நிறுவனத்தின் உரிமையாளர்களும் பணியாளர்களும் கொள்ளையர்களில் ஒருவரை பொலிசாரிடம் ஒப்படைத்த ‘திகில்’ நிறைந்த சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.

இரண்டு தளங்களில் இயங்கிவரும் தாமோர் நகைமாளிகை’ மேற் தளத்தில் வெள்ளி நகைகள் விற்பனையும் பணப்பறிமாற்றுச் சேவையும் கீழ்த் தளத்தில் தங்கள நகைகள் விற்பனையும் இடம்பெறுகின்றன. மிசிசாகாவில் நன்கு அறியப்பெற்ற தமிழர் நிறுவனமாக விளங்கும் அங்கு அன்றைய தினம் கடைபூட்டும் நேரம் நெருங்கியதால் உரிமையாளர்களும் பணியாளர்களுமாக ஐந்துக்கு மேற்பட்டவர்கள் அங்கு இருந்துள்ளார்கள்.

கொள்ளையர்கள் கடை பூட்டியிருந்ததனால் உள்ளே ஆட்கள் இல்லையென எண்ணி கொண்டு வந்த சுத்தியல்களால் முன் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்து நகைகள் வைக்கப்பட்டிருந்த காட்சியறைப் கண்ணாடிப் பெட்டிகளை உடைத்து அதிலிருந்து நகைகளை அபகரித்துச் செல்ல முனைந்துள்ளார்கள். கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு ‘உசாரான’ உரிமையாளர்களும் பணியாளர்களும் கைகளில் அகப்பட்ட பலகைகளைக் கைகளில் எடுத்துக்கொண்டு வந்தபோது உள்ளே நுழைந்திருந்த இரு கொள்ளையர்களில் ஒருவன் வெளியே ஓடிச்சென்று மூன்றாவது கொள்ளையன் தயாராக வைத்திருந்த வாகனத்தில் ஏறி ஓடிசென்றார்கள். ஆனால் உரிமையாளர்களிடம் அகப்பட்டுக் கொண்டு ஒரு கொள்ளையனை அவர்கள் பிடித்து கட்டி வைத்துக்கொண்டு பொலிசாருக்கு தகவல் கொடுக்கவும் விசேட பொலிஸ் பிரிவினர் அங்கு விரைந்து வந்துள்ளார்கள்.

பின்னர் கொள்ளையர்களில் ஒருவனை கைது செய்து விலங்கிட்டு அவனிடத்தில் விசாரணை செய்த போது ஏனைய பல இடங்களிலும் இந்த கொள்ளையர் கூட்டம் தங்கள் கைவரிசையை காட்டியிருந்தது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து கொள்ளையை முறியடித்தது மாத்திரமன்றி, ஒரு கொள்ளையனை பிடித்து தங்களிடம் ஒப்படைத்த தாமோர் நகைமாளிகை’ உரிமையாளர்களையும் ஏனைய பணியாளர்களையும் பொலிசார் பாராட்டிச் சென்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.